பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218. தமிழ் நூல் தொகுப்புக் கை "பாண்டியன் மாறன் வழுதி என்னும் பெயரில் நற்றினையில் (97) ஒன்றுமாக இரண்டு உள்ளன. பாண்டியன் பன்டுை தந்தானும், பாண்டியன் மாறன் வழுதியும், பன்னடு தந்த பாண்டியன் மாறன் வழுதி என்னும் ஒருவராகத்தான் இருக்கக்கூடும். கூடலூர் கிழார் இயற்றிய பாடல்கள் குறுந் தொகையில் (166, 167, 214) மூன்றும், புறநானுாற்றில் (229) ஒன்றுமாக நான்கு உள்ளன. நல்லந்துவனர் இயற்றிய பாடல் அகநானுாற்றில் (') ஒன்று உள்ளது; நற்றிணையில் (88) ஒன்று உள்ளது; பரிபாடலில் (6, 8, 11, 20 நான்கு பாடல்கள் உள்ளன; அன்றியும், கலித்தொகையில் உள்ள நெய்தல் கலிப்பகுதி முழுவதும் (33 - பாடல்களும்) நல்லந்துவனரின் படைப்பே யாகும். எழுவருள், பாடல்கள் இயற்றியுள்ள நால்வர் போக, மற்ற மூவருள் உருத்திரசன்மர் ஒருவர். இவரைப் பற்றி ஏதேதோ கதை சொல்லப்படுகிறது. இறையனர் அகப் பொருளுக்குச் சங்கப் புலவர்கள் பலர் இயற்றிய உரைகளுள் நக்கீரரது உரையே சிறந்தது எனத் தேர்ந்தெடுத்தவர் உருத்திரசன்மர் என்னும் செய்தி முன்பே ஒரிடத்தில் கூறப் பட்டுள்ளது. என்வே, உருத்திரசன்மர் கடைச்சங்க காலத் தவர் என்பது உறுதி. உருத்திரனர் என்னும் பெயரால், குறுந்தொகையில் (274) ஒரு பாடல் இருக்கிறது. இந்தப் பாடலை இயற்றிய உருத்திரருைம், உருத்திரசன்மரும் ஒருவரே என உறுதியாக எவ்வாறு சொல்ல முடியும்? . அடுத்து, குறுந்தொகை ஒன்றும் புலப்படவில்லை. ஐங்குறுநூறு தொகுத்த கூடலூர் கிழாரின் பாடல்கள் மூன்றும், நற்றிணை தொகுப்பித்த பன்னடு தந்த பாண்டியன் மாறன் வழுதியின் பாடல் ஒன்றும் குறுந்தொகையில் இருப்பதால், குறுந்தொகை தொகுத்த பூரிக்கோவும் இவர்கள் காலத்தவராகவே இருக்கக் கடும். 'கோ' என்பதால் இவர் அரச மரபினராயிருக்கலாம். சங்க நூல்களில் இவருடைய பாடல்கள் இல்லையாயினும், இவரும் கடைச்சங்க காலத்தவரே யாவர். தொகுத்த பூரிக்கோ பற்றி எட்டுத் தொகை 215 மூன்ருவதாக, யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறையாரிடம் வருவோம். இவர் கடைச் சங்க காலத்துச் சேர மன்னர்களுள் ஒருவர். சேர வேந்தர்களுள் கருவூர்ச் சேரமான் சாத்தன், சேரமான் இளங்குட்டுவன், சேரமான் கணைக்கால் இரும்பொறை, சேரமான் கோட்டம் பலத்துத் துஞ்சிய மாக்கோதை, சேரமானெந்தை, முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன் முதலியோர் இயற்றிய பாடல்கள் பல சங்கத்தொகை நூல்களில் இருப்பினும், யானைக்கட் சேய்' மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஒன்றும் பாடியதாகக் காணப்படவில்லை. ஆளுல், இவரைப் பற்றிக் குறுங் கோழியூர் கிழார் என்னும் புலவர் பாடிய பாடல்கள் (17,20, 22) மூன்றும், கூடலூர் கிழார் பாடிய பாடல் (229) ஒன்று: மாக மொத்தம் நான்கு பாடல்கள் புறநானுாற்றில் உள்ளன. எனவே, இம் மன்னர் கடைச் சங்க காலத்தவர் என்பது: தெளிவு. இதற்கு இன்னும் பல சான்றுகள் தரமுடியுமா யினும் இம்மட்டோடு அமைவோம். இந்த மன்னரது ஆட்சிக் காலம் கி. மு. முதல் நூற்ருண்டு (கி. மு. 62 - கி. மு. 42): எனப் பேராசிரியர் கா. சுப்பிரமணியப் பிள்ளையவர்கள் (M. L. பிள்ளை) மொழிந்துள்ளனர். கால ஆண்டு பற்றிக் கருத்து வேறுபாடு இருப்பினும், கடைச் சங்க காலத்தவர் என்பது உறுதி. எனவே, தொகுத்தவர்கள், தொகுப்பித் தவர்கள் என அறியப்படும் எழுவருமே கடைச்சங்க காலத்தவர் என்பது புலனுகும். இதுகாறும் கூறியவற்ருல், பத்துப்பாட்டு எட்டுத் தொகை நூல்களைக் கடைச் சங்கத்தார் தொகுத்ததாக நச்சிஞர்க்கினியர், பேராசிரியர் முதலிய அறிஞர்கள் கூறி யிருப்பது சாலவும் பொருந்தும் என்பதும், இவற்றைத். தொகுத்த காலத்தை, கி.பி. நான்காம் நூற்ருண்டு வரையும், இக்கால ஆராய்ச்சியாளர் சிலர் தள்ளிப் போட்டுக்கொண்டு போவது சிறிதும் பொருந்தாது என்பதும் முற்றமுடித் , முடிபாகும். கருங்கக் கூறின், கி. பி. முதல் நூற்ருண்டித்குன் இவை தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். - + 4**