பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 தமிழ் நூல் தொகுப்புக் கை களும் இருந்தன. பொருள் பாடல்களே மிகுதியா யிருந்தன. இதல்ை, தமிழர் கள் புற வாழ்க் சையினும் அக வாழ்க்கையிலேயே மி குந்த ஆர்வம் கொண்டவர்கள் என்று பொருள் கொள்ளலாகாது; அச வாழ்வின் நிஃ க்களஞகிய வீடு திருந்தின், புற வாழ் வின் நிலைக்களகிைய நாடு திருத்தும் என்பது ஈண்டு நினைவு கூரத் TN அடிப்படையில், அன்றைய நாளில் அகப் 4. "] } of so, 2。 தக்கது. ) பொருள் பாடல்கள் பல்கி மலிந்தன. கலிப்பா, பரிபாட்டு முதலியவற்றைக் பாக்களுள்ளும், அத் தக் கால த் காட்டி லும் ஆசிரியப் பாக்களே மிக்கிருந்தன. தில் ஆசிரியரைப்போல ஆசிரியப் பாக்களே தலே ம பெற்றி ருந்தன. எனவே அறிஞர்கள் முதலில் ஆசிரியப் பாக்களேத் திரட்டினர். அவை பல பொருள் பற்றிப் பல காலத் தில் பலரால் பாடப்பெற்ற உதிரிப் பாடல்களாகும். அவற்றுள் புறப்பாடல்களினும் அகப்பாடல்கள் மிக்கிருந்தன. அஃதா வது, அகப்பாடல்களும் புறப்பாடல்களும் மூன்றுக்கு ஒன்று (3, 1) என்ற விகிதத்தில் இருக்கக் கண்டனர். அவற்றுள் சிறந்தனவற்றைத் துாற்றிப் புடைத்துத் தேர்ந்தெடுத்தனர். அகப் பொருள் பாடல்கள் ஆயிரத்திரு நூறு கிடைத்தன. இவற்றை ஒரே நூலாகத் தொகுப்பின் படியெடுப்பதற்கும் படிப்பதற்கும் கையாள்வதற்கும் அலுப்பு சலிப்பாய் இருக்கு மெனக் கருதி மூன்று பிரிவாக்கினர். இவ்வாறு மூன்ரு கப் பிரிக்காமல், அறுநூறு - அறுநூறு பாடல்களாக இரண் டாகப் பிரித்திருக்கலாம்; ஆல்ை, பாடல்களின் அளவும் இரண்டு சரிபாதியாகப் பிரிக்கும் அளவில் அமைப்பும் பாடல்களாக இல்லை. நானுாறு - நானுாறு - நா னு று மூன் ருகப் பிரித்துத் தொகுக்கும் நி3லயிலேயே பாடல்களின் அளவும் அமைப்பும் இருந்தன. அகப்பொருள் பற்றிய ஆயிரத்திருநூறு ஆசிரியப் பாக்களும் நான்கு அடிகளுக்குக் குறையாமலும் முப்பத் தோர் அடிகளுக்கு மேற்படாமலும் இருந்தன. இவற்றுள், பெரிய -பாடல்களே யெல்லாம் சேர்த்து ஒரு நூலாகவும், சிறிய புறப்பொருள் பாடல்களினும் அகப் எட்டுத் தொகை 223

பாடல்களை யெல்லாம் சேர்த்து ஒரு நூலாகவும், நடுத்தர மான பாடல்களையெல்லாம் சேர்த்து ஒரு நூலாகவும் தொகுக்க விரும்பினர். இந்தத் திட்டத்தின்படி, பதின் மூன்று அடிகளுக்குக் குறையாமல் பார்த்தால் நானுாறு பாடல்களும், பதின் மூன்று அடிகளுக்குக் கீழே ஒன்பது அடி -களுக்குக் குறையாமல் பார்த்தால் நானுாறு பாடல்களும், ஒன்பது அடிகளுக்குக் கீழே நான்கு அடிகளுக்குக் குறையாமல் நானுாறு பாக்களும் தேறுவதைக் கண்டறிந்தனர். இந்த இயற்கையமைப்பைப் பயன்படுத்திக் கொண்டு, ஆபிரத்திரு நூறு பாடல்களையும் நானுாறு பாடல்கள் வீதம் பகுத்து மூன்று நூல்களாகத் தொகுத்தனர். ஆயிரத்திருநூறு பாடல் களுக்கும் மிகுதியாகவும் கிடைத்திருக்கலாம்: ஆபினும், மேற்கூறிய அடியளவுகளுக்குப் பொருந்தி வரும்படியாக உள்ள நானூறு - நானூறு - நானுாறு பாடல்களாக ஆயிரத் திருநூறு பாடல்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக் கலாம். இவ்வாறு தொகுத்த மூன்று நூல்களின் விவரம் வருமாறு :

ஆயிரத் திருநூறு பாடல்களுள். பதின் மூன்று அடி களுக்குக் குறையாமல் முப்பத்தோர் அடிகள் வரையும் கொண்ட நானுாறு நீண்ட நெடும் பாடல்களின் தொகுப்புக்கு "நெடுந்தொகை நானுாறு’ எனப் பெயர் வழங்கப் பட்டது. ஒன்பது அடிகளுக்குக் கீழே நான்கு அடிகள் வரை யுங்கொண்ட நானுாறு சிறிய-குறுகிய பாடல்களின் தொகுப் புக்குக் 'குறுந்தொகை நானுாறு எனப் பெயர் வழங்கப் பட்டது: இவ்விரண்டிற்கும் இடைப்பட்டதாக, ஒன்பது அடி முதல் பன்னிரண்டு அடிவரை கொண்ட நானுாறு நல்ல பாடல்களின் தொகுப்புக்கு நற்றினே நானுாறு’ எனப் பெயர் வழங்கப்பட்டது. நெடுந் தொகைக்கும் குறுந் தொகைக் கும் இடைப்பட்டது நற்றினேயை இடைத் தொகை என்று வழங்கியிருக்கலாமே எனின், அஃது அவ்வளவு அழகுபடாது. அப்படி வழங்குவது மரபு அன்று. முதல் தொகை', 'கடைத் தொகை என்று பெயர் வைத்திருந்தால், இடைப்பட்டதை "இடைத் தொகை எனலாம்; இஃது அப்படியில்லையல்லவா?