பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. தமிழ் நூல் தொகுப்புக் கை பாடல் கலையானது, தாலாட்டுப் பாடலாகவோ, விளையாட்டுப் பாடலாகவோ, நாடக-திரைப் பாட லாகவோ, தொழிலுாக்கப் பாடலாகவோ, பல்வேறு உணர்ச்சிப் பாடலாகவோ, அன்பு ததும்பும் (பக்திப் பரவசத்) தெய்வப் பாடலாகவோ, இன்ன பிறவாகவோ, எந்த உருவத்திலாயினும் பல்வேறு மக்களையும் தன் பால் காந்தம்போல் ஈர்த்துக் கொள்கிறது: இத்தகைய பேராற்றல் வேறு எந்தக் கலைக்கும் இந்த அளவு இல்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை. அவ்வளவு ஏன்? பிறந்த குழந்தைக்கும் தாலாட்டுப் பாட்டு; இறந்து கிடக்கும் குழந்தைக்கு மட்டுமல்ல-உடலை எடுத்துப் போனபின் னரும் ஒப்பாரிப் பாட்டு எனில், பாடல் கலையோடு மக்களுக்கு உள்ள மிக நெருங்கிய தொடர்பு நன்கு புலகுைம். இதி லிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய உண்மை யாது? * மற்ற மற்றக் கலைகள் உயர்நிலையில் உள்ளவர்களைக் கவரப் பாடற்கலையோ எளிய நிலையிலுள்ள பாமர மக்களையும் கவர் வதால், இது மக்கள் கலே யாகும்-அதாவது, பொதுமக்களின் பொதுக் கலையாகும்’ என்பதுதான்! மக்கள் கலை மட்டுமா? பாடற்கலை மக்கள் கலை மட்டுமா? மரஞ் செடி கொடி களையும் வளரச் செய்து வாழவைக்கும் மாண்புடைய கலை யன் ருே? பாட்டுக் கேட்டுப் பயிர் வகைகளும் செழிப்பதாக நாம் அறிகிருேமே! ஒரு கிழமை யிதழில் ஒரு நகைச்சுவைப் படத்துணுககு பார்த்த நினைவு வருகிறது : ஒரு பக்கம் ஒரு பெரிய செடி இருக்கிறது. இன்னொரு பக்கம் ஒரு சிறிய செடி உள்ளது. பெரிய செடி சிறிய செடியைப் பார்த்துப் பின்வரு மாறு கேட்கிறது : நம் இருவரையும் ஒரே நாளில்தானே நட்டார்கள்! உனக்கும் பாட்டுப் பாடுகிரு.ர்கள் : எனக்கும் பாட்டுப் பாடு கிருர்கள். அப்படியிருக்க, நான் மட்டும் பெரிதாய் உயரமாய் வளர்ந்திருக்கிறேன். நீ மட்டும் ஏன் சிறிதாய் - குட்டை யாய் இருக்கிருய்?" . - துரல் தொகுப்புக் கல் 5. இந்தக் கேள்விக்குச் சிறிய செடி பின்வருமாறு பதில் சொல்கிறது : "உன் பக்கம் குமாரி ராதிகா பாடுகிருள்; அதல்ை நீ உயரமாய் வளர்ந்து விட்டாய். என் பக்கம் ஒரு கிழவி அல்லவா பாடுகிருள்! நான் எப்படி உன்னைப்போல் உயர மாய் வளரமுடியும்?" r இந்த வேடிக்கைத் துணுக்கால், பாடற்கலை மக்கள் கலை மட்டுமன்று, மரஞ் செடி கொடிகளுக்கும் மகிழ்வளிக்கும் மாபெருங் கலை என்பது போதரும்! பாடற் கலையின் தோற்றம் : உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் எண்ணற்ற பாடல்கள் உள்ளன - எண்ணிறந்த பாடல் இயற்றும் முறையை அறிவிக்கும் பல இலக்கண நூல்கள் ఒcrare, குறிப்பாகத் தமிழ்மொழியை எடுத்துக்கொள்ளின், 9. வொரு பாடலுக்கும் உரிய இலக்கணம் பரந்துபட்டது. జ్ల "ஒப்பீடு (Comparison) வேண்டுமெனில் - பிரெஞ்சு மொழிப் பாடல் இலக்கணத்திலும்,தமிழ் மொழிப் பாடல் இலக்கணம் மிகவும் கடுமையானது. மூவாயிரம் ஆண்டுக்கு முற்பட்டது எனப்படும் தொல்காப்பியம் என்னும் தமிழ் இலக்கண நூலில், பாடல் இயற்றும் முறைகளை அறிவிப்பதற்கென்றே, "செய்யுள் இயல்’ என்னும் ஒரு பகுதி ஆசிரியர் தொல்காப்பி யனரால் அமைக்கப் பெற்றுள்ளது. அந்தப் பகுதியில் தொல் காப்பியர், தமக்கு முன்னலேயே புலவர்கள் பலர் செய்யுள் இலக்கணம் எழுதியிருப்பதாகப் பல இடங்களில் சுட்டிக் காட்டியுள்ளார் : "நல்லிசைப் புலவர் ... வகுத்துரைத்தனரே' (1) 'யாப்பென மொழிய யாப்பறி புலவர்." (74) "பொழிப்பென மொழிதல் புலவர் ஆ)ே” (94) இதனை நோக்குங்கால், பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே, தமிழ் மொழியில் செய்யுள்கள் பலவும், செய்யுள் இலக்கண நூல்கள் பலவும் தோன்றியிருந்தமை புலகிைறது.