பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

..." ബ് * : 27 326 தமிழ் நூல் தொகுப்புக் கை கூல வாணிகன் சாத்தன் கேட்டனன் இது, பல்வகை தெரிந்த பதிகத்தின் மரபென்.' எனப் பதிகம் முடிக்கப் பெற்றுள்ளது. நூலின் உட்கிடையை முதலில் கூறி, இதுதான் பதிகம்’ என இறுதி அடியில் குறிப் பிடப்பட்டிருப்பது காண்க. இதுகொண்டு, பதிசம் என்ருல் என்ன என்பதை நன்கு தெளிந்து கொள்ளலாம். இனி, பதிற்றுப் பத்தின் பதிகங்களின் இறுதியில் கூறப் பட்டுள்ள பரிசில் விவரம் முறையே வருமாறு : இரண்டாம் பத்து :- (முன்னரே கூறப்பட்டுள்ளது). மூன்ரும் பத்து :- பாடிப் பெற்ற பரிசில்; நீர் வேண்டி யது கொண்மின் என யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல் வேண்டும் என, பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு ஒன்பது பெருவேள்வி வேட்பிக்க, பத்தாம் பெருவேள்வியிற். பார்ப்பானையும் பார்ப்பனியையும் கானராயினர்.” நான்காம் பத்து.- பாடிப் பெற்ற பரிசில்: நாற்பது நூருயிரம் பொன் ஒருங்கு கொடுத்துத் தான் ஆள்வதிற் பாகம் கொடுத்தான் அக்கோ.” - ஐந்தாம், பத்து :- பாடிப் பெற்ற பரிசில் உம்பற் காட்டு வாரியையும் தன் மகன் குட்டுவன் சேரலையும் கொடுத் தான் அக்கோ. (மகனைக் கொடுத்தான் என்ருல், மாளுக்க கை ஒப்படைத்திருப்பான் என்று கருதலாம்.) ஆரும் பத்து :- பாடிப் பெற்ற பரிசில் : கலன் அணிக என்று அவர்க்கு ஒன்பது காப் பொன்னும் நூருயிரங் காண முங் கொடுத்துத் தன் பக்கத்துக் கொண்டான் அக்கோ." ஏழாம் பத்து :- பாடிப் பெற்ற பரிசில் : சிறுபுற மென நூருயிரங் காணங் கொடுத்து, நன்ரு என்னும் குன்றேறி நின்று தன் கண்ணிற்கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத் தான் அக்கோ.” எட்டாம் பத்து :- பாடிப் பெற்ற பரிசில்: தானும் கோயிலாளும் புறம்போந்து தின்று கோயிலுள்ள வெல்லாம் பதிற்றுப் பத்து கொண்மின் என்று, காணம் ஒன்பது நூருயிரத்தோடு அரக கட்டிற் கொடுப்ப, அவர், யான் இரப்ப இதனை யாள்க என்று அமைச்சுப் பூண்டார். ஒன்பதாம் பத்து :- 'பாடிப் பெற்ற பரிசில் : மருளில் லார்க்கு மருளக் கொடுக்க வென்று உவகையின் முப்பத் திராயிரம் காணங் கொடுத்து, அவர் அறியாமை ஊரும் மனையும் வளமிகப் படைத்து, ஏரும் இன்பமும் இயல்வூரப், பரப்பி, எண்ணற்காகா அருங்கல வெறுக்கையோடு பன்னுள் ருயிரம் பாற்பட வகுத்துக் காப்பு மறம் தான் விட்டான் அக்கோ.” ஒவ்வொரு புலவரும் பெற்றுள்ள பரிசு விவரங்களைப் படிக்குங்கால் தலை சுற்றுகிறது. ஒருவர் அரசனைப் பத்து வேள்விகள் செய்யவைத்துத் தன் மனைவியுடன் சுவர்க்கம் போயுள்ளார். சுவர்க்கத்திலும் மனைவியைப் விட்டுப் பிரிய மனப்பில்லாத அவர் நல்லவர் போலும்! மற்ருெருவர்,அரசனது. ஆட்சியில் பாதிப் பாகம் பெற்றுள்ளார். இன்டுருைவர் . மன்னன் மகனையே பெற்றுக் கொண்டுள்ளார். வேருெருவர், . குன்றின் மேல் ஏறிநின்று கண்ணில் தெரியும் பகுதியெல். லாம் எய்தியுள்ளார். ஒருவர், அரண்மனைப் பொருள் களுடன் அரசுகட்டிலும் கொடுப்பக் கொள்ளாது அமைச்சர் பதவியை ஏற்றுள்ளார். இன்ைெருவர், தம்மூர் சென்ற பிறகு, தமக்குத் தெரியாமலே அங்கே முன்கூட்டி உரியவக்ை. கப் பட்டிருந்த ஊரும் மனையும் இன்ன பிறவும் எதிர்பாராது. பெற்றுள்ளார். இவையன்றி. ஒவ்வொருவரும் கணக்கற்ற பொன்னும் பொருளும் ஊர்களும் பெற்றுள்ளதாகப் Lಣ್ಣತ್ತೆ களுள் பறைசாற்றப் படுகின்றன. இதனால், அன்று தமிழ்ப் புலவோர்க்கு இருந்த பெருஞ்சிறப்பும், மன்னர்களின் Qo: வண்மையும் புலகுைம். ஆனல், இந்தப் பரிசு விவரங்கரேசி, சிலர் நம்பாமல் ஐயுறக் கூடும். இவை உண்மையே என்பது. அறிஞர்களின் கருத்து. சான்றும் கூற முடியும். . மூன்ரும் பத்தில் தன்னைப் பாடிய பாவைக் கெளதமனுகின்; வேண்டுகோளின் படி, பல்யானைச் செல்கெழு குட்டுவன்