பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 தமிழ் நூல் தொகுப்புக்கலை பிட்டுள்ளார். முல்லைப்பாட்டு என்னும் நூலைப் போலவே, குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலும் பத்துப் பாட்டில் ஒன்ருகும் என்னும் .ெ ச ய் தி யு ம் இங்கே நினைவுகூரற் பாலது . இவ்வாறு கலித்தொகை உரையாசிரியர்களால் பல பெயர் களில் எடுத்தாளப்பட்டுள்ளது. - "கற்றறிந்தோர் ஏத்தும் கலி', 'கல்வி வலார் கண்ட கலி” என்றெல்லாம் சிறப்பிக்கப் பெற்றுள்ள கலித்தொகை கற்பதற்கு மிகவும் சுவையானது; அதன் நயம் மிக்வும் இனியது. இந் நூற்பாடல்களை உரையாசிரியர்கள் மிகுதியாக எடுத்தாண்டுள்ளனர். நச்சினர்க்கினியர் ஐம்பதுக்கு மேற். பட்ட இடங்களில் இந்நூலே எடுத்தாண் டிருப்பதிலிருந்து இதன் பெருமை நன்கு விளங்கும். 14. எழுபது பரிபாடல் தலைச்சங்க நூல்களுள் ஒன்ருக எத்துணையோ பரிபாடல்" என ஒரு நூல் இறையனர் அகப்பொருள் உரையில் குறிப் பிடப்பட்டுள்ள செய்தி முன்னரே விளக்கப்பட்டுள்ளது. அதனின்றும் வேறு பிரித்துக் காட்டுவதற்காக, "எழுபது பரிபாடல்’ என்னும் பெயரில் இந்தக் கடைச்சங்கத் தொகை நூல் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. பரிபாடல் என்னும் பாடல வகையைப் பற்றிய பொதுச் செய்திகள், தலைச்சங்க நூல்களுள் ஒன்ருன எத்துணையோ பரிபாடல்’ என்னும் தலைப்பின்கீழ் முன்பு விரிவாக விளக்கப்பட்டுள்ளது. போதாக் குறைக்கு, இந்தத் தலைப்புக்கு முன்னே உள்ள கலித்தொகை யும் பரிபாடலும் என்னும் பொதுத்தலைப்பின் கீழும் உரிய, செய்திகள் தரப்பட்டுள்ளன. . தொல்காப்பியம்-செய்யுளியலில் பரிபாடலுக்கு இலக். கணம் கூறப்பட்டுள்ள நூற்பாக்கள் அனைத்தும் முன்பு. எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. அந் நூற்பாக்களுக்கு உரை யாசிரியர்கள் வரைந்துள்ள உரைப்பகுதிகளைக் காணின். பரிபாடலுக்கு உரிய இலக்கணங்கள் நன்கு புலனாகும். உரையாசிரியர்கள் கூறியுள்ளபடி, பரிந்துவரும் பாடலாகிய அந்தப் பரிபாடல் என்னும் வகைப் பாடல்களின் தொகுப் பாகிய எழுபது பரிபாடல்’ என்னும் நூலுக்கு வருவோம். பாடல் பங்கு: எழுபது பரிபாடல்களுள் திருமாலுக்கு எட்டுப்பாடல்: களும், முருகனுக்கு 'முப்பத்தொரு பாடல்களும், ஆாடு, கிழாளுக்கு ஒன்றும், வையை யாற்றிற்கு இருபத்தாறும்: மதுரைக்கு நான்கும் உரிய பாங்காகும். இதனே :