பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 தமிழ் நூல் தொகுப்புக் கை என இக் கருத்தைத் தெரிவித்துள்ளார். எனவே, தெரிந்ததி லிருந்து தெரியாததற்குச் செல்லுதல்’ என்னும் உளவியல் முறைப்படி, இப்பொழுது நமக்குக் கிடைத்திருக்கிற வழிநூலாகிய புறப்பொருள் வெண்பா மாலையைக் கொண்டு, கிடைக்காத முதல் நூலாகிய பன்னிரு படலத்தின் பாங்கினைப் புரிந்து கொள்ளலாம். அது வருமாறு : புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூல் புறப் செய்திகளை வெண்பாவால் விளக்குவதாகும்; பொருள் இந்நூல் வெட்சிப் படலம், கரந்தைப் படலம், வஞ்சிப் நொச்சிப் படலம், காஞ்சிப் படலம், உழிஞைப் படலம், படலம், தும்பைப் படலம், வாகைப் படலம், பாடாண் படலம், பொதுவியல் படல்ம், கைக்கிளைப் படலம், பெருந் தினேப் படலம் என்னும் பன்னிரண்டு படலங்களே உடையது. எனவே, இந் நூலே ப் போலவே, இதன் முதல் நூலாகிய பன்னிரு படலமும், புறப்பொருள் பற்றிய பன்னிரண்டு படலங்களை உடையது என்பதும், அதனலேயே "பன்னிரு. பட லம்’ எனப் பெயர் வழங்கப்பட்டது என்பதும் விளங்கும். முதல் நூலாகிய பன்னிரு படலத்துள் உள்ள பன்னிரண்டு படலங்களைப் பார்த்தே, வழி நூலாகிய புறப்பொருள் வெண்பா மாலை யும் பன்னிரண்டு படலங்களை அமைத்துக் கொண்டது என உணர்க. அடுத்து, புறப்பொருள் வெண்பா மாலையின் சிறப்புப்பாயிரச் செய்யுளிலுள்ள, " துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன் முதல் பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த பன்னிரு படலமும் பழிப்பின் றுணர்ந்தோன்' என்னும் பகுதியைப் பார்க்கவேண்டும். மாளுக்கர்களாகிய தொல்காப்பியர் முதலிய பன்னிருவரும் சேர்ந்து செய்த நூல் பன்னிரு படலம் என இச் செய்யுள் கூறுகிறது. எனவே, பன்னிரு படலம் என்பது, பன்னிருவர் இயற்றிய பன்னிரு படலங்களின் தொகுப்பு நூல் - தொகை நூல் என்பது பெறப்படும்; பெறவே, ஒவ்வொருவரும் ஒவ்வொரு படலம் இயற்றிருக்கவேண்டும் என்பது தெளிவு. அகத்தியரின் புலவர்கள் பன்னிரு படலம் 151 பன்னிரு படலத்தை இயற்றிய ஆசிரியர்கள் தொல் காப்பியர் முதலிய பன்னிருவர் எனவே, இந்நூல் இயற்றித் தொகுக்கப்பட்ட காலம், தொல்காப்பியத்தை ஒட்டிய இடைச்சங்க காலம் என்பது புலப்படும். ஒவ்வொருவரால் ஒவ்வொரு படலம் வீதமாக இந்தப் பன்னிரண்டு படலங்களும் இயற்றப்பட்டன என்னும் கருத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு, பன்னிருவருள் முதல்வராகிய தொல்காப்பியரால் பன்னிரு படலங்களுள் முதலாவதாகிய "வெட்சிப் படலம் இயற்றப்பட்டது என்னும் கருத்துப் பரவலாகச சொல்லப்பட்டு வருகிறது. தொல்காப்பியர் இல்லை ஆனால், தொல்காப்பிய உரையாசிரியர்களாகிய இளம் பூரணரும் நச்சினர்க்கினியரும், இலக்கண விளக்க நூல் - உரை ஆசிரியராகிய வைத்திய நாதப் புலவரும், பன்னிரு படலத்தின் முதல் படலமாகிய வெட்சிப் படலத்தைத் தொல்காப்பியர் இயற்றினர் என்னும் கருத்தைக் காரணங் காட்டி வன்மையாக மறுத்துள்ளனர். பன்னிரு படலத்தின் தலையெழுத்தைத் தீர்மானிப்பதற்கு இவர்தம் மறுப்புரைகளே நாம் ஊன்றி நோக்க வேண்டும். முறையே அவை வருமாறு : இளம்பூரணர், தொல்காப்பியப் புறத்திணை இயல் முதல் நூற்பாவிற்கு முன்னல், ‘புறத்திணை இயல்' என்னும் தலைப்பிற்கு விளக்கமாகத் தாம் எழுதியுள்ள, 'ஆன்ற சிறப்பின் அறம் பொருள் இன்பமென மூன்றுவகை நுதலியது உலகம் அவற்றுள் அறமும் இன்பமும் அகலா தாகிப் புறன் எனப் படுவது பொருள் குறித் தன்றே என்னும் பன்னிரு படலச் செய்யுளுள் புறப்பொருள் அறமும் இன்பமும் அகலாதாகி எனக் கூறினர். அவர் கூறுதல் வாகைத்திணைக்கண் கட்டில் நீத்த பால் முதலாகக் காமம் நீத்த பால்’, சருக அறங்கூறுதலின் அச்சார்பாகக் கூறியது மயங்கக் கூறுதலாம்.