பக்கம்:தமிழ்ப்புலவர் சரித்திரம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பகுதி] - ', ' '.தமிழ்ப் புலவர் சரித்திரம் : பரவைபணிந் ததுஞ்சோழன் பதந் தனையோ வம்மானே பாண்டியனார் பராக்கிரமம் பகர்வரிதே யம்மானே," 7 என்றதோர் பாடலைப் பாடி அவர் கூற்றைக் கண்டித்தனர். அப்பொழுதே யொட்டக்கூத்தர்க்கு நம் புகழேந்திப் புலவர்மே லழுக்காறுண்டாயிற்று. பின்னர் ஒட்டக்கூத்தர், தக்கவாறு பலவற்றை யெடுத்துரைத்து, வழுதி மகளைச் சோழற்கு மணஞ்செய்தளிப்பான் நிச்சிதார்த்தஞ் செய்து போந்து, தம்மாணாக்கனாய சோழராசற்கு அச்செய்தியை யறிவுறுத்தார். உடனே சென்னியுந் தனக்குப் பிரதிநிதியாகச் சின்னாள் கான் மணவினை முடித்து வருங்காறும், அரசாளுமாறு ஒட்டக்கூத்தரைத் தன்னாட்டகத்திருத்திச் சேனைகளோடும் மதுரை சென்று ஆலவாயிற் பெருமானடிகளே வணங்கி, மாறன் மகளை மணஞ்செய்துகொண்டனன். பின் எனர்ப் பாண்டியன் தன் அருந்தவச் செல்வ மகட்குத் தான் கொடுத்த பாரிபோக வரிசையுடன் நந்தம் பாவலர் தலைவர் புகழேந்திப் புலவரையும் அவளுக்கு ஏற்ற வமயங் களிற் றக்கவாறு புத்தி கூறும் பொருட்டு அனுப்பினான். அவ்வாறே யவர் சோணாடு போந்தமை யுணர்ந்த லொட்டக்கூத்தர் பழம் பகைமை பாராட்டி அவரை மாவித்துவானென மதித்தலின்றி யிரக்கர் துறந்து கறுக்கொண்டு, "இவன் முன்னர் நமக்குப் பெண் கொடுக்கவொட் டாது தகைத்து நந்தங் குல முதலியவற்றைப் பாண்டியனெதிரிற் பழித் துரைத்தோன்," என்று கோட்சொல்லி யரசனை கம்புமாறு செய்து நந்தம் புகழேந்திப் புலவர் தம்பி சொனைக் காவற் சிறையகஞ் செறித்தார். அவர் 'இது கர் மாநுசாரம்' எனக்கருதி அச்சிறைக்க ணிருந்து கொண்டு அதனருகே தண்ணீர்க்குச் செல்லுமா உம் மகளிர் தஞ் செவிக்கினிமையாக, இக்காலத்தில் நங்கைப் பாட்டென வழங்குதூஉம் அல்லியரசிமாலை, பவளக்கொடிமாலை, புரந்தான் களவுமாலையென்று நூல்களை எளிதிற்பொருள் விளங்குமா றுபாடி, அவர்கட்குக் கொடுத்து, அதுபற்றி. யவர்கள் மனமகிழ்ந்து கொண்டுவந்து கொடுத்த சல்லரிசி பருப்பு முதலியவற்றைச் சாளர வழியாய்ப் பெற்றுச் சமைத்துண்டு, மிகுந்ததைச் சிறைக்காவலர்க்கீந்து அவர் தமைத் தம் வயப் படுத்திக்கொண்டு காலங் கழித்து வருவாராயினார். இங்கன மிருந்து வருகாளில் ஒரு சாட் சோழராசன் தனது பட்டத் தரசுவாலின்மீது இவர்ந்து வீதியி லாவரும்போது காவற் சிறைக்கோட் டத்தின் மேற்றளத்தில் நின்ற புகழேந்தியாரைத் தன்னாசிரியர் ஒட்டக்கூத் தருக்குக் காட்டி, 'இவர் செந்தமிழ் மொழியிற் சிறந்த புலவரல்லரோ ?' என்று வினவ லும் அவர் தம்மினுமிழிந்தார் புகழேந்தியா' ரென்பதுப... அவரை யிகழ்ந்து புனைவிலி புகழ்ச்சியணியாக, << மானிற்கு மோர்ந்த வாளரி வேங்கைமுன் வற்றிச்செத்த கானிற்கு மோவவ் வெரியுந் தழன்முன் கனைகடலின்