பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

143


இந்தப் பெருமையையும் பந்தல் அழகையும் பார்த்தாயா பண்ணைக்காரா? 3315

இந்தப் பையனுக்கு இந்த வீட்டு ஓதம் உறைத்து விட்டது.

இந்த மடம் இல்லாவிட்டால் இன்னொரு சந்தை மடம்.

இந்த மூஞ்சிக்குத் தஞ்சாவூர்ப் பொட்டு; வந்தவாசி வரையில் வல்லவாட்டு; அதைக் கழுவப் புழலேரித் தண்ணீர்.

இந்த வளைவு சிக்கினால் எப்படித்தான் பிள்ளை பிழைக்கும்?

இந்த வீட்டிலே வைத்தது மாயமாய் இருக்கிறது. 3320

இந்த வீட்டுக்கு வந்தாலும் வந்தேன்; பக்கத்து வீட்டுக் கருவாட்டு நாற்றம் போச்சு.

இந்திரன் கெட்டதும் பெண்ணாலே; சந்திரன் கெட்டதும் பெண்ணாலே.

இந்திரனைச் சந்திரனை இலையாலே மறைப்பாள்; எமதர்ம ராசாவைக் கையாலே மறைப்பாள்.

(மறைப்பான்.)

இந்திராணிக்கு இந்திரன் வாய்த்தது போல.

இந்திராதி தேவர்க்கும் வந்திடும் தீவினை. 3325

இந்திரைக்கு மூத்தவள் மூதேவி.

(இந்திரை-திருமகள்.)

இப்படிப் பார்த்தால் ஸ்த்ரீ ஹத்தி; அப்படிப் பார்த்தால் பிரம்ம ஹத்தி.

இப்போது இல்லையெனின் எப்போதும் இல்லை.

இம்பூரல் தெரியாமல் இருமிச் செத்தான்.

(இம்பூரல்-தூதுவளை போன்ற ஒரு செடி, இருமலுக்கு ஏற்றது.)

இம்மிய நுண்பொருள் ஈட்டி நிதியாக்கிக் கம்மியருள் மூவர் களிறு. 3330

(இம்மி நுண் பொருள்.)

இம்முனு போனாளாம்; பிள்ளையைப் பெற்றாளாம்.

இமயம் சேர்ந்த காக்கையும் பொன்னாகும்.

இமயம் முதல் குமரி வரையில்.

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

இயல்பாய் மணம் இல்லாச் சந்தனக் கட்டை இழைத்தாலும் மணக்காது. 3335