பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

167


உச்சஸ்தானே ஷு பூஜித.

உச்சாணிக் கிளையில் ஏறினால் உயிருக்கு ஆபத்துத்தானே?

உச்சி இட உச்சி இட உள்ளே குளிர்ந்தது. 3860

உச்சி குளிர்ந்தது.

உச்சி மீனுக்கு எட்டாம் மீன் உதய மீன்.

(புறநானூறு, 229.)

உசிர் இருந்தால் உப்பு மாற்றிக் குடிக்கலாம்.

(உயிர்.)

உசு பிடி என்றால் நீ பிடி என்கிறது நாய்.

உஞ்ச விருத்திக்குப் போனாலும் பஞ்சம் இல்லாமல் இருக்க வேணும். 3865

உட்கார்ந்தவன் காலில் மூதேவி; ஓடுபவன் காலிலே சீதேவி.

உட்கார்ந்தவனைக் கட்டமாட்டாதவன் ஓடுகிறவனைக் கட்டுவானா?

உட்கார்ந்து அல்லவோ படுக்க வேண்டும்?

உட்கார்ந்து இருக்கச்சே அடித்தால் பொன்னாகும்; ஓடச்சே அடித்தால் செம்பானாலும் ஆகும்; இரும்பானாலும் ஆகும்.

உட்காரச் சொல்லாத சர்க்கரை போல் பேச்சு. 3870

உட்சுவர் இருக்க வெளிச்சுவர் பூசலாமா?

உட்சுவர் தீற்றிப் புறச்சுவர் தீற்று.

உட்புறத்துக்கு வெளிப்புறம் கண்ணாடி.

உடம்பிலே காய்த்துத் தொங்குகிறதா?

உடம்பிலே பயம் இருந்தால் நன்றாகச் செய்வான். 3875

உடம்பு உளைந்த கழுதை உப்புக் களத்துக்குப் போனது போல.

(போயிற்றாம்.)

உடம்பு எங்கும் சுடுகிற தழலை மடியிலே கட்டுகிறாய்.

உடம்பு எடுத்தவன் எல்லாம் ஓடு எடுத்தவன்.

(எடுத்தால்.)

உடம்பு எல்லாம் புழுத்தவன் அம்மன் கோவிலைக் கெடுத்தானாம்.

உடம்பு எல்லாம் புளுகு; பல் எல்லாம் ஊத்தை. 3880

உடம்புக்குப் பால் குடிப்பதா? ஊருக்குப் பால் குடிப்பதா?

(உடம்புக்குப் பால் குடிக்கா விட்டாலும் ஊருக்குப் பால் குடிக்க வேண்டும்.)