பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

173


உண்ணாத தின்னாத ஊர் அம்பலம். 4005

உண்ணா நஞ்சு ஒருகாலும் கொல்லாது.

உண்ணாமல் ஊர் எல்லாம் திரியலாம்; உடுக்காமல் ஒரு வீட்டுக்கும் போகலாகாது.

உண்ணாமல் ஒன்பது வீடு போகலாம்; உடுக்காமல் ஒரு வீடும் போகலாகாது.

உண்ணாமல் கெட்டது உறவு; கேளாமல் கெட்டது கடன்.

உண்ணாமல் தின்னாமல் உறவின் முறையுாருக்கு ஈயாமல். 4010

உண்ணாமல் தின்னாமல் ஊர் அம்பலம் ஆனேனே!

(ஓமல் ஆனேனே.)

உண்ணாமல் தின்னாமல் வயிறு உப்புசம் கொண்டேன்.

உண்ணி கடித்த நாய் உதறுவது போல.

உண்ணியைக் கண்டால் ஊரிள் பஞ்சம் தெரியும்.

(உண்ணி-பையன், நாஞ்சில் நாட்டு வழக்கு.)

உண்ணுகிற சோறு வெல்லம். 4015

உண்ணுகிற வயிற்றை ஒளிக்கிறதா?

உண்ணுபவன் உண்டு விட்டுப் போனால் உன் தலைப்புண் விட்டுப்போகிறது.

உண்ணும் கீரையிலே நண்ணும் புல்லுருவி.

உண்ணுவார் இல்லை; உறங்குவார் இல்லை. ஒரு கட்டு வெற்றிலை தின்பார் இல்லை, சாந்து சந்தனம் பூசுவார் இல்லை. தலைக்குத் தப்பளம் போடுவார் இல்லை, வா மருமகளே வா

(தவளை,)

உண்ணுவாளாம், தின்னுவாளாம் சீதா தேவி; உடன்கட்டை ஏறுவாளாம் பெருமா தேவி. 4020

(தின்னுவாளாம் குந்தமாதேவி, ஏறுவாளாம் சீதா தேவி.)

உண்ணேன், உண்ணேன் என்றால் உடலைப் பார்த்தால் தெரியும்.

உண்பது இருக்க ஒரு கருமம் செய்யேல்.

உண்பது நாழி; உடுப்பது நான்கு முழம்; எண்பது கோடி நினைந்து எண்ணும் மனம்.

உண்பன, தின்பன உறவுதான்; செத்தால் முழுக்குத்தாள்.

உண்பார் பாக்கியம், சம்பா விளையும். 4025

உண்பாரைப் பார்த்தாலும் உழுவாரைப் பார்த்தல் ஆகாது.