பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

117


காற்றும் மழையும் கலந்து அடித்தது போல்.

காற்றைப் பார்த்துக் கப்பல் நாட்டு.

காற்றைப் பிடித்துக் கரகத்தில் அடைத்த கதை.

(அடைத்துக் கொள்ளலாமா? அடைத்தது போல.)

காற்றைப் பிடித்துக் கையினில் அடக்க முடியுமா? 8270


கானகத்து உக்க நிலா.

(பழமொழி நானுாறு)

கானல் நீர் போல.

கானலைத் தண்ணீராய்க் கண்டதைப் போல.

கானலை நீர் என்று எண்ணும் மான் போலே.

கானலைச் சலமாய்க் கண்டது போல. 8275


காஷ்மீர்க் கண்டமோ?

காஷ்மீரம் முதல் கன்யாகுமரிவரை.

காஷ்மீருக்குப் போனால் காசு மீறாது.