பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

தமிழ்ப் பழமொழிகள்


 கிழவி தலை நரைத்தது என்ன? அதை மழுங்கச் சிரைத்தது என்ன? 8370


கிழவி திரண்டாளாம்; பஞ்சாங்கக்காரன் பிட்டுக்கு அழுதானாம்.

கிழவி பாட்டைக் கிண்ணாக்காரன் கேட்பானா?

(கிழவி பேச்சைக் கின்னரக்காரன்.)

கிழவி போன போது சுவர் இடிந்து விழுந்ததாம்.

கிழவியும் காதம் குதிரையும் காதம்.

(ஒளவையார் கூற்று.)

கிழவியும் காலை மடக்க மாட்டாள். 8375


கிழவியை அடித்தால் வழியிலே பேளுவாள்.

கிழவியை எடுத்து மணையிலே வைத்தாற் போல.

கிழவியைப் பாட்டி என்பதற்குக் கேட்க வேண்டுமா?

கிழிஞ்சாப்பிள்ளை மணியத்திலே நீட்டின விரல் அற்றுப் போம்.

கிழித்த கோட்டைத் தாண்ட மாட்டான். 8380


கிழிந்த சேலை காசுக்கு இரண்டு.

கிழிந்த சேலையும் பேச்சுக் கற்ற வாயும் சும்மா இரா.

கிழிந்தது கிருஷ்ணன் வேட்டி; தைத்தது தாசன் வேட்டி.

கிழிந்த பம்பரம் காசுக்கு இரண்டு,

(கிழிந்த பட்டு.)

கிள்ளப் பழுக்குமாம்; கிளி இருந்து கொஞ்சுமாம். 8385 .


கிள்ளாவுக்குச் செல்லும் கெடி மன்னர் போல.

கிள்ளி எடுக்கச் சதை இல்லை; பேர் தொந்தியா பிள்ளை.

கிள்ளுக் கீரை போல் உள்ளத்தில் எண்ணாதே.

கிள்ளுக் கீரையா?

கிள்ளுகிறவனிடத்தில் இருந்தாலும் அள்ளுகிறவனிடத்தில் இருக்கக் கூடாது. 8890


கிள்ளுவார் கீழே இருந்தாலும் இருக்கலாம்; அள்ளுவார் கீழே இருக்க முடியாது.

கிள்ளை பழுக்குமாம்; கிளி வந்து கொஞ்சுமாம்.

கிளர்த்தும் கல்வி தளர்ச்சி படாது.

கிளி அருமையைப் பூனை அறியுமா?

கிளி அழுதால் பூனை விடுமா? 8395


கிளி போலப் பெண்டாட்டி இருந்தாலும் குரங்குபோலக் கூத்தியாள் வேணுமாம்.

கிளியைப் போலப் பேச்சும் மயிலைப் போல நடையும்.

கிளியை வளர்த்துக் குரங்கு கையில் கொடுத்தது போல.