பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

தமிழ்ப் பழமொழிகள்


குசும்புக்கும் கவுண்டிக்கும் மருந்து ஏது?

(பொறாமைக்கும். வழுக்கைக்கும். நாஞ்சில் நாட்டு வழக்கு.)

குசு விடாமல் இருந்தால் குங்கிலியம் மணக்கும்.

குசுவுக்குப் பயந்து குடி ஓடிப்போனாளாம்.

குஞ்சிரிப்புக்கு மருந்து சாப்பிட உள்ள சிரிப்பும் போனாற் போல.

குஞ்சு செத்த காக்கை சிறகு அடித்துக் கொள்வது போல. 8460


குஞ்சுடன் மேய்ந்த கோழியைப் போல.

குட்டக் குட்டக் குனிகிறவனும் முட்டாள்; குனியக் குனியக் குட்டுகிறவனும் முட்டாள்.

(மடையன்.)

குட்டங்கோனி தட்டான் குறைக்கும் வரி வைத்தான்.

குட்ட நாடு கெட்டால் எட்டு நாடும் கெட்டன. குட்டி ஆடு கொழுத்தாலும் வழுவழுப்புப் போகாது. 8465

(குறையாது.)


குட்டி ஆடு செத்ததென்று கோனாய் குந்தி அழுததாம்.

குட்டி ஆனைக்குக் கொம்பு முளைத்தது; பட்டணமெல்லாம் பறந்தோடிப் போச்சு.

குட்டி ஆனையும் குளத்தைக் கலக்கும்.

குட்டி இட்ட நாய்க்குக் குப்பை மேடு கோபுரம்.

குட்டிக் கரணம் போட்டாலும் கொடுப்பது அரிது. 8470


குட்டிக் கரணம் போட்டாலும் மட்டி புத்தி போகாது.

(மட்ட)

குட்டிக் கரணம் போட்டாலும் லோபி கொடான்.

(காசு கொடான்.)

குட்டிக் கரணம் போட்டாலும் வட்டில் சோற்றுக்கு வழி இல்லை.

குட்டிக் கலகம் பண்ணுகிறவன் குட்டுப்பட்டுச் சாவான்.

(செய்பவன்.)

குட்டிக் கிடையிலே ஓநாய் புகுந்தது போல. 8475


குட்டிக்கும் பட்டிக்கும் குடிபோகச் சந்தோஷம்.

(குட்டிக்கும் நாய்க்கும், பட்டி-நாய். குடிபோகக் கொண்டாட்டம்.)

குட்டிக் குரங்கானாலும் கெட்டிப் பிடி.

குட்டிக் கொழுந்தனும் கோள் சொல்லி நாத்தனாரும்.

குட்டிக் கொள்ளும் போதே கண்ணில் குட்டிக் கொண்டான்.

(கொண்டால்.)

குட்டிக் கொள்ளும் போதே முட்டிக் கொண்டானாம். 8480