பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

127


குட்டி குரைத்து நாயின் தலையிலே வைத்தது போல.

குட்டி கொழுத்தாலும் வழுக்கை வழுக்கைதான்.

குட்டிச் சுவரில் முட்டிக் கொள்ள வெள்ளெழுத்தா?

குட்டிச் சுவரிலே தேள் கொட்டக் கட்டுத் தறியிலே நெறி ஏறுமா?

(இடுமா?)

குட்டிச் சுவரிலே தேள் கொட்டத் தண்ணீர் மிடாவிலே நெறி கட்டினது போல. 8485


குட்டிச் சுவரிலே தேள் கொட்ட நெடுஞ் சுவரிலே நெறி கட்டியதாம்.

குட்டிச் சுவரும் குரங்கு இருந்த மாளிகையும் பாழ்.

(மாளிகையும் போல.)

குட்டிச் சுவரே. கூறை இல்லா வீடே!

குட்டி செத்ததுமல்லாமல் குழி தோண்ட இரண்டு பணம்.

குட்டி செத்தாலும் குரங்கு விடாது. 8490


குட்டி நரை குடியைக் கெடுக்கும்.

குட்டி நாய்க்குப் பல் முளைத்தது போல.

குட்டி நாய்க்கும் குழந்தைப் பிள்ளைக்கும் இடம் கொடுக்கக் கூடாது.

குட்டி நாய் குரைக்கிறது போல.

குட்டி நாய் குரைத்துப் பட்டி நாய்க்குக் கேடு வந்தது. 8495

(உதை வந்தது.)


குட்டி நாய் கொண்டு வேட்டை ஆடினது போல.

(நாயை.)

குட்டி நாய் வேட்டை நாயை விரட்டினாற் போல.

குட்டி நாயும் குழந்தைப் பிள்ளையும் இட்ட கையைப் பார்க்கும்.

குட்டி நாயை விட்டு வேட்டை ஆடினாற்போல.

குட்டிப் பாம்பை அடித்தாலும் குற்றுயிராக விடக்கூடாது. 8500

(விடாதே.)


குட்டி பெருத்தாலும் வழுக்கை வழுக்கைதான்.

குட்டி போட்ட நாய் கூனி உட்கார்ந்தது போல.

குட்டி போட்ட நாய் போலக் குரைக்கிறது.

குட்டி போட்ட நாய் போல வள்ளென்று விழுகிறான்.

குட்டி போட்ட நாய் முடங்கினாற் போல. 8505


குட்டி போட்ட நாய் முணுமுணுத்தாற் போல.

குட்டி போட்டி நாயைப் போல் ஏன் உறுமுகிறாய்?