பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

தமிழ்ப் பழமொழிகள்


 குட்டி போட்ட பூனைபோல அலைகிறான்.

குட்டி மானம் விட்டுக் குசவனோடு பேசினால் சட்டையும் பண்ணான்; சட்டியும் கொடான்.

(சட்டியும் கொடான், சட்டையும் பண்ணான் மானம் தப்பி.)

குட்டியின் கையைப் பிடித்துக் குரங்கு கொள்ளிக் கட்டைச் சூடு பார்த்தாற் போல. 8510

குட்டி வேதாந்தம் குடியைக் கெடுக்கும்.

குட்டின குட்டும் குண்டிற் பாய்ந்த தண்ணீரும் வருமா?

(குழியிற் பாய்ந்த.)

குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும்.

குட்டை ஏறிக் குரைத்த நாயே, சதை வீங்கிச் செத்த நாயே!

குட்டை குழப்பினால் சேறுதான் மிஞ்சும். 8515


குட்டை குழப்புகிறான்.

குட்டைத் தாதன் குட்டையிலே விழுந்தான்.

குட்டைத் தாதன் மகன் மட்டைத்தாதன் குளத்திலே விழுந்து செத்தான்.

குட்டை மரம் குலை குலையாய்க் காய்த்திருக்கிறது.

குட்டையில் ஊறிய மட்டை. 8520


குட்டையைக் கலக்கிப் பருந்து இரை இட்டதுபோல.

(இரை தேடுவது.)

குட்டையைக் குழப்பி மீனைப் பிடிக்கிறது போல.

குட்டை வால் நாய்க்கு நெஞ்சில் அறிவு.

குடத்தில் பாக்குப் போடு; மிளகாய்ப் பொடிக்கு உப்புப் போடாதே.

குடத்தில் பொன் கூத்தாடுமா? 8525


குடத்தில் விளக்கை இட்டுக் கோபுரத்தின் மேல் வைத்தாற் போல.

குடத்து விளக்குக்கும் குன்றி மணிச் சாதத்துக்கும் இருக்கிறேன்.

குடத்துள் ஏற்றிய விளக்குப் போல.

(குடத்தில்.)

குடத்தைக் கவிழ்த்துப் பழத்தைச் சொரிந்த கதை.

குடப் பாம்பினிடைச் சிறு தேரை. 8530


குடப்பால் கறந்தாலும் குதிரையோட்டம் ஓட மாட்டாது.

குடப்பால் கறந்தாலும் கூரை பிடுங்குகிற மாடு ஆகாது.

(கூரைபிடுங்கித் தின்னுமாம் மாடு.)

குடப்பாலில் கையைவிட்டுச் சத்தியம் செய்.