பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

தமிழ்ப் பழமொழிகள்



ஒரு பசியும் இல்லை என்பாள் ஒட்டகத்தையும் விழுங்கி விடுவாள்

ஒரு பணம் இரண்டு பாளை; ஒன்று கள்; ஒன்று நுங்கு. 5990

ஒரு பணம் கொடுத்து அழச் சொல்லி ஒன்பது பணம் கொடுத்து ஓயச்சொன்னது போல.

ஒரு பணம் கொடுப்பானாம்; ஓயாமல் அழைப்பானாம்.

ஒரு பானைச் சோற்றுக்கு ஒருசோறு பதம்.

(ஒன்றே மாதிரி.)

ஒரு பிள்ளை என்று ஊட்டி வளர்த்தாளாம்; அது சொரிமாந்த குணம் பிடித்துச் செத்ததாம்.

ஒரு பிள்ளை பிள்ளை ஆகுமா? ஒரு மரம் தோப்பு ஆகுமா? 5995

(பிள்ளையும் பிள்ளை அல்ல.)

ஒரு பிள்ளை பெற்றவளுக்கு உள்ளங்கையில் சோறு; நாலு பிள்ளை பெற்றவளுக்கு நடுச் சந்தியிலே சோறு.

ஒரு பிள்ளை பெற்றவருக்கு உறியிலே சோறு; நாலு பிள்ளை பெற்றவளுக்கு நடுத்தெருவிலே சோறு.

(ஒரு பெண் பெற்றவளுக்கு, நடுத்தெருவிலே ஒடு.)

ஒரு பிள்ளை பேளவும் ஒரு பிள்ளை நக்கவும்.

ஒரு புடலங்காயை நறுக்கிப் பாதி கறிக்கும் பாதி விதைக்கும் வைத்துக் கொள்ள முடியுமா?

ஒரு புத்திரன் ஆனாலும் குருபுத்திரன் ஆவானா? 6000

(குரு புத்திரன் சிலாக்கியம்: புத்திரன் வாக்கியம்,)

ஒரு பூனை மயிர் ஒடிந்தால் ஒன்பது பிராமணனைக் கொன்ற பாவம்.

(யாழ்ப்பாண வழக்கு.)

ஒரு பெட்டை நாய்க்கு ஒன்பது ஆண் நாயா?

ஒரு பெண் என்று ஊட்டி வளர்த்தாள்; அது ஊர்மேலே போச்சுது.

ஒரு பொய்க்கு ஒன்பது பொய்.

ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்ல வேண்டும். 6005