பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

11


ஒரு துஷ்டனுக்கும், ஒரு துஷ்டனுக்கும் ஒரே வழி;

ஒரு துஷ்டனுக்கும். ஒரு நல்லவனுக்கும் இரண்டு வழி;

இரண்டு நல்லவர்களுக்கு மூன்று வழி.

ஒரு தையல் ஒன்பது தையலைத் தவிர்க்கும்.

ஒரு தொழிலும் இல்லாதவர் நாடகக்காரர் ஆனார். 5970


ஒரு தொழுமாடு முட்டிக் கொள்ளவும் செய்யும், நக்கிக் கொள்ளவும் செய்யும்.

ஒரு நன்றி செய்தாரை உள்ளளவும் நினை.

ஒரு நாக்கா, இரண்டு நாக்கா?

ஒரு நாய் ஊளையிட ஊர் எல்லாம் நாய் ஊளை.

ஒரு நாய்க்குத் தலை வலித்தால் ஒன்பது நாய்க்குத் தலை வலிக்கும். 5975


ஒரு நாய் குரைத்தால் எல்லா நாயும் குரைக்கும்; ஒரு நாய்க்கு வலித்தால் எல்லா #நாய்க்கும் வலிக்கும்.

ஒரு நாய் குாைத்தால் பத்து நாய் பதில் கொடுக்கும்.

ஒரு நாய் வீட்டில் இருந்தால் பத்துப் பேர் காவல் காத்தது போல் ஆகும்.

ஒரு நாள் ஆகிலும் திருநாள்.

ஒரு நாள் ஒரு யுகமாக இருக்கிறது. 5980


ஒரு நாள் கூத்துக்கு மீசையைக் சிரைத்தானாம்,

(தலையைச் சிரைத்தானாம்.)

ஒரு நள் பஞ்சத்தை உற்றாரிடம் காட்டினாளாம்.

ஒரு நாளும் இல்லாத திருநாள்.

ஒரு நாளும் இல்லாமல் திருநாளுக்குப் போனால் திருநாள் எல்லாம் வெறு நாள் ஆச்சு.

ஒரு நாளும் சிரிக்காதவன் திருநாளிலே சிரித்தான்; திருநாளும் வெறு நாள் ஆச்சு. 5985


ஒரு நாளும் நான் அறியேன். உள்ளே விளக்கெரிந்து.

ஒரு நாளைக்கு இறக்கிறது கோடி, பிறக்கிறது கோடி.

ஒரு பக்கம் பெய்தால் ஒரு பக்கம் காயும்.