பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

151



குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்.

(இடத்திலேதான் மகிழ்ச்சி.)

குழந்தையும் தெய்வமும் கொண்டு அணைக்கிற பக்கம்.

குழந்தையைப் பறிகொடுத்துத் தவிக்கிற போது, கிடக்கிறது கிடக்கட்டும், கிழவனை மணையில் வை என்றது போல.

குழந்தையையும் கிள்ளி விட்டுத் தொட்டிலையும் ஆட்டுதல்.

குழத்தை வளர்ப்பது ஒரு கோயில் கட்டுவதற்குச் சமம். 9065


குழந்தை வாக்குத் தெய்வ வாக்கு.

குழந்தை வாயை முத்தம் இட்டது போல

குழம்புப் பால் குடிக்கவும் குமர கண்ட வலிப்பா?

குழவணப்பிள்ளை போல் பெருத்திருக்கிறான்.

குழறிக் குழறிக் குமரனைப் பாடு. 9070


குழிக் கண்ணும் கோடுவாய் வழிச்சலும்.

குழிப்பிள்ளை மடிப்பிள்ளை.

குழிப்பிள்ளையை எடுத்து இழவு கொண்டாடுகிறது போல.

(கொண்டாடாதே.)

குழிப் பிள்ளையைத் தோண்டி ஒப்பாரி வைப்பது போல.

குழிப் பிள்ளையை நரி சுற்றுவது போல. 9075


குழியிற் பயிரைக் கூரைமேல் ஏற விடுகிறது.

(ஏற்றினாற் போல.)

குள்ளக் குளிர நீராடினால் குளிர் போகும்.

குள்ள நரி தின்ற கோழி, கூவப் போகிறதோ?

(கூப்பிடப் போகிறதோ?)

குள்ளப் பார்ப்பான் பள்ளத்தில் விழுந்தான்; தண்டு எடு, தடி எடு.

குள்ளன் குடி கெடுப்பான்; குள்ளன் பெண்சாதி ஊரைக் கெடுப்பாள். 9080


குள்ளன் குழியில் விழுந்தால், தண்டெடு தடி எடு.

குள்ளனைக் கொண்டு கடலாழம் பார்க்கலாமா?

(பார்க்கிறான்.)

குளத்தில் போட்டுக் கிணற்றில் தேடலாமா?.

(நதியில் தேடுவதா?)

குளத்திலே கால் கழுவா விட்டால் குளத்துக்கு என்ன குறை?

குளத்தின் மேலே கோபம் வந்தால் தண்ணீர் குடிக்காமல் போகிறதா? 9085