பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

தமிழ்ப் பழமொழிகள்


குளத்தினிடம் கோபித்துக் கொண்டு கால் கழுவாமல் போனானாம்.

குளத்துக்கு மழை குந்தானி போற் பெய்யுமோ?

(கோவிந்த சதகம்.)

குளத்தைக் கலக்கிப் பருந்துக்கு இரை இட்டது போல.

(இரை கொடுக்கவோ?)

குளத்தை வெட்டி விட்டுத் தவளையைக் கூப்பிட வேண்டுமா?

குளப்படி கண்டு கடல் ஏங்குமா? 9090


குளப்படி தண்ணீர் சமுத்திரம் ஆனால், குடம் தண்ணீர் எவ்வளவு ஆக வேண்டும்?

குளப்படி தண்ணீரைச் சமுத்திரத்தில் இறைப்பானேன்?

குளப்படி நீரை இறைத்தால் கடற்பள்ளம் நிரம்புமா?

குளம் இருக்கிறது; நான் இருக்கிறேன்.

குளம் எத்தனை குண்டியைக் கண்டதோ? குண்டி எத்தனை குளத்தைக் கண்டதோ? 9095


குளம் காக்கிறவன் தண்ணீரைக் குடியானோ?

குளம் தோண்டித் தவளையைக் கூப்பிட வேண்டுமா?

குளம் பெருத்தது அடைச்சாணி; கோயில் பெருத்தது சேரமா தேவி.

குளம் வற்றினால் முறை வீதம் உண்டா?

(வற்றியும். குளம் உடையும் போது.)

குளம் வெட்டப் பூதம் புறப்பட்டது போல. 9100


குளம் வெட்டு முன்னே முதலை குடி இருக்குமா?

குளவி ஊதி ஊதிப் புழுவைத் தன் நிறம் ஆக்கியது போல.

குளவிக்குப் பச்சைப் புழு பிள்ளை.

குளவிக் கூட்டிலே கல்லை விட்டு எறியாதே.

(எறிகிறதா?)

குளவிக் கூட்டைக் கோலால் கலைக்காதே. 9105

(கலைத்தாற் போல.)


குளவி கூடு கட்டினால் பிறப்பு; நாய் பள்ளம் தோண்டினால் இறப்பு.

குளவி புழுவைத் தன் நிறம் ஆக்குவது போல.

குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசிக் கொண்டது போல.

குளிசம் கட்டிக் குட்டி இரட்டித்தது.

(கட்டியும்).

குளித்தால் குளிர் போகும்; நசித்தால் நாணம் போகும். 9110