பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

153



குளித்துப் பேணினவனுக்கு இரு வேலை.

குளித்து முப்பது நாள் ஆகவில்லை; குனிந்து உப்பு எடுக்க முடியவில்லை.

குளிர்ந்த கொள்ளியாய் இருந்து குடியைக் கெடுக்கலாமா?

குளிர்ந்த நிழலும் கூத்தியார் வீடும் உள்ளபோது மயிரான உத்தியோகம் இருந்தால் என்ன? போனால் என்ன?

(இந்த வருமானம் வந்தால் என்ன? போனால் என்ன?)

குளிர் விட்டுப் போயிற்று. 9115


குளிராத உள்ளும் கூத்தியாரும் உண்டானால் மயிரான சம்பளம் வந்தால் என்ன? போனால் என்ன?

குளிராத வீடும் கூத்தியாரும் உண்டானால் மயிரான வேளாண்மை விளைந்தால் என்ன? விளையாமற் போனால் என்ன?

குளுகுளு என்பார் தீப் பாய்வார்களா?

(குலுகுலு என்பார்.)

குற்றத் தண்டனையிலும் சுற்றத் தண்டனை நல்லது.

குற்றத்தைத் தள்ளிக் குணத்தைப் பாராட்டு. 9120

(எடுத்துக் கொள்.)


குற்றம் அடைந்த கீர்த்தி குணம் கொள்வது அரிது.

(கொள்ளல் ஆகாது.)

குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறு என்னும்; குறும்பி உள்ள காது தினவு கொள்ளும்.

(குறுகுறுக்கும். தினவு எடுக்கும்.)

குற்றம் பார்க்கிற் சுற்றம் இல்லை.

(சுற்றம் ஏது?)

குற்றம் போலச் செய்து குணம் செய்கிறது. குற்றம்

மறைப்பதில் மற்றொரு குற்றம் நேரும். 9125


குற்ற மனச்சாட்சி கூடி வாழச் சத்துரு.

(வாழும் சத்துரு.)

குற்றவாளி பலவீனன்.

குற்றாலத்தில் குளித்தவனும் குடை வரையில் தூங்கினவனும்.

குற்றாலத்துக் குரங்கே, மரத்தை விட்டு இறங்கே.

குற்றால நாதருக்கு நித்தம் தலைவலி. 9130


குற்றால நாதருக்கு வற்றாக் குடி நீரும் மாறாத் தலையிடியும்.

(குறுமுனி அமுக்கியதால் தலைவலி, அதற்குத் தலைமுழுக்கு.)