பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

167


கெட்டுக் கெட்டுக் குடி ஆகிறதா? 9400


கெட்டுப் போகிற காலம் வந்தால் சொட்டுப் புத்தி தேடுவானாம்.

(நாள் வந்தால், சொட்டுப் புத்தி தோன்றும் தேறாது.)

கெட்டுப் போன பார்ப்பானுக்குச் செத்துப் பீயான பசுவைத் தானம் செய்தானாம்.

கெட்டும் பட்டணம் சேர்.

கெடுக்க நினைக்கின் அடுக்கக் கேடுறும்.

கெடுக்கினும் கல்வி கேடு படாது. 9405

(கொடுக்கினும் )


கெடுங் காலத்துக்குக் கெட்டார் புத்தியைக் கேட்டார்.

கெடுங்குடி சொற் கேளாது.

கெடுத்தவருக்கும் கேடு நினையாதே.

கெடுப்பதும் வாய்; படிப்பதும் வாய்.

(வாயால்.)

கெடுப்பாரைத் தெய்வம் கெடுக்கும். 9410


கெடுமதிக்குப் படுகுழியை வெட்டு.

கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது.

கெடுவது செய்தால் படுவது கருமம்.

கெடுவாய், கேடு நினையாதே.

கெடுவார்க்குக் கெடுமதி பிடரியில். 9415

(கெடுப்பார்க்கு.)


கெடுவான் கேடு நினைப்பான்.

கெண்டை பட்டாலும் பட்டது; கிடாரம் பட்டாலும் பட்டது.

கெண்டையைப் போட்டு வராலை இழுக்கிறதா?

(இழுக்கிறது.)

கெதம் போனது கிருஷ்ணப்ரீதி.

கெருடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்டான். 9420

(பல்டி என்பான்.)


கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கு அல்ல.

கெலியன் பாற்சோறு கண்டது போல.

(கலியன்.)