பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

191


கோடி கொடுத்தாலும் குழந்தை கிடைக்குமா?

கோடி கொடுத்தாலும் கோபுரம் தாழாது.

கோடிச் சீமான் துணிய வேண்டும்; அல்லது கோவணாண்டி துணிய வேண்டும்.

கோடிச் சீமானும் கோவணாண்டியும் சரியா?

கோடித் துக்கம் குழந்தை முகத்தில் மறையும். 9920

(மறையும்)


கோடி தனம் இருந்தாலும் குணமில்லா மங்கையை மணம் முடித்தல் ஆகாது.

(மங்கையுடன் கூடாதே.)

கோடி நேசம் கேடு படுத்தும்.

கோடிப் புடைவையைக் கட்டிக் கொண்ட தைரியத்தில் குச்சைக் கொளுத்திக் கொண்டாளாம்.

(குடிசையை.)

கோடி போனாலும் ஐயோ! கோவணம் போனாலும் ஐயோ!

கோடி முண்டர் ஏறி மிதித்தாலும் கூழாங்கல் சாந்துக்கு வருமா? 9925


கோடி வித்தையும் கூழுக்குத்தான்.

கோடீசுவரன் ஆக வேண்டுமா? லட்சாதிபதி ஆக வேண்டுமா?

கோடீசுவரனைக் கெடுக்க ஒரு கோவணாண்டி போதும்.

கோடு அடுத்தவன் ஏடு எடுப்பான்.

(எடுத்தவன். கோடு-Court போனவன்.)

கோடு ஏறினார் மேடு எறினார். 9930

(கோடு-Court.)


கோடு கண்டாயோ? ஒடு கண்டாயோ?

(ஷ)

கோடை இடி இடித்துக் கொட்டும் மழைபோல.

கோடை இடி இடித்துப் பெய்யும்; மாரி மின்னிப் பெய்யும்.

கோடை இடி குமுறி இடித்தாற் போல.

கோடை இடித்துப் பெய்யும்; மாரி மின்னிப் பெய்யும். 9935


கோடை இடி விழுந்தாற் போல்.

கோடையால் காய்கிற பயிர் வாடையால் தளிர்க்கும்.

(கோடையில் பயிர்; வாடையில் பயிர்.)

கோடையிலே தண்ணீர் ஓடை கண்டமான் போல்.

கோணக் கோணக் கோவிந்தா!