பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

தமிழ்ப் பழமொழிகள்

கோழி திருடியவன் தலையில் கொண்டை மயிர்.

கோழி தின்ற கள்ளனும் கூட நின்று குலாவுகிறான்.

கோழி போனது அல்லாமல் குரலும் போயிற்று. 10090


கோழி மிதித்துக் குஞ்சு சாவது இல்லை.

கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?

(குஞ்சுக்குக் கேடு ஆகுமா?)

கோழி முட்டைக்குச் சுருக்கு வைத்து, வாத்து முட்டைக்கு வரிச்சல் போடுவான்.

கோழி முட்டைக்குத் தலையும் இல்லை; கோவில் ஆண்டிக்கு முறையும் இல்லை.

கோழி முட்டைக்கு மயிர் பிடுங்குகிறான். 10095


கோழி முடத்துக்குக் கடாவெட்டிக் காவு கொடுக்கிறதா?

(கடா வெட்டிப் பலி இட்டது போல.)

கோழி மேய்த்தாலும் கும்பினியான் கோழி மேய்க்க வேணும்.

(கோறன்மேத்திலே. Government.)

கோழியின் காலில் கச்சையைக் கட்டினாலும் குப்பையைத்தான் சீக்கும்

(கிளறும்.)

கோழியும் கொடுத்துக் குலையும் இழந்தாளாம்.

(கூக்குரலும் படுகிறதா?)

கோழியும் யாருடையதோ? புழுங்கலும் யாருடையதோ? 10100

(யாழ்ப்பாண வழக்கு.)


கோழியை அடிப்பதற்குக் குறுந்தடி ஏன்?

கோழியைக் கேட்டா ஆணம் காய்ச்சுகிறது?

கோழியைக் கேட்டுத்தான் மிளகாய் அரைப்பார்களா?

கோழியைப் பருந்து அடிக்கும்; பருந்தைப் பைரி அடிக்கும்.

(பைரி-ராஜாளி.)

கோழியையும் கொடுத்துக் குரலையும் இழந்தாளாம். 10105


கோழியை வளர்க்கப் பிடித்தாலும் கேர் கேர் என்னும்; கழுத்தை அறுக்கப் பிடித்தாலும் கேர் கேர் என்னும்.

கோழை நாய்க்குப் பட்டது அரிது.

கோழையில் மொய்த்துக் குழம்பும் ஈயைப் போல்.

கோழையும் ஏழையும் கூடின காரியம் பாழிலே பாழ்.

கோள் சொல்பவனைக் கொடுந்தேள் என்று நினை. 10110