பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

தமிழ்ப் பழமொழிகள்

சாட்சிக்காரன் காலில் விழுகிறதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்.

(கட்சிக்காரன் காலில் விழலாம்.)

சாட்டு இல்லாமல் சாவு இல்லை.

(சாக்கு.)

சாட்டை அடியும் சவுக்கடியும் பொறுக்கலாம்; மூட்டைக்கடியும் முணுமுணுப்பும் ஆகா. 10515


சாட்டை இல்லாப் பம்பரத்தை ஆட்ட வல்லார் உண்டோ?

சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டி வைக்க வல்லவன்.

சாட்டை இல்லாமல் பம்பரம் ஆடுமா?

சாடிக்கு ஏற்ற மூடி.

சாடிக்கு மூடி வாய்த்தது போல. 10520


சாடி சட்டி சூளையிலே கோடை இடி விழுந்தாற் போலே.

சாடை தெரியாதவன் சண்டாளன்.

சாண்அடி இன்டியோ மூனடி கட்டடா,

(கட்றா.)

சாண் உழவு முழ எருவுக்குச் சமம்.

சாண் ஏற முழம் சறுக்குகிறது. 10525


சான் கல் அலம்பினால் முழம் சோறு.

(கழுவினால்..கோயிற் குருக்களுக்கு.)

சாண் காட்டிலே முழத்தடி வெட்டலாமா?

சாண் குருவிக்கு முழம் வாலாம்.

சாண் சடைக்கு முழக் கயிறா?

(முழத் துணியா?)

சாண் சடை; முழம் சோறு. 10530


சாண் செடியிலே முழத்தடி வெட்டலாமா?

சாண் தண்ணீரிலே முழப்பேய்.

சாண் தள்ளிப்படுத்தால் இந்த வினை இல்லை.

சான் பண்டாரத்துக்கு முழத் தாடி.

(முழ விபூதி.)

சாண் பண்டாரத்துக்கு முழம் இலிங்கம். 10535


சாண் பறையனுக்கு முழத் தடி.

சாண் பாம்பு ஆனாலும் முழத் தடி வேண்டும்.