பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234

தமிழ்ப் பழமொழிகள்


சீரங்கத்து நடை அழகு, காஞ்சீபுரம் குடை அழகு.

சீரங்கம் நடை, பெருமாள் குடை, திருப்பதி வடை, திரு நாராயணபுரம் முடி.

சீரணி கெட்டால் கோரணி. 10940


சீராளன் கல்யாணத்தில் மாரோடே மார் தள்ளுது.

(மூன்று பேர் பெண்கள், மாரோடே மார் தள்ளுது.)

சீராளனைப் பெற்ற பிறகு திரிச்சீலைத் துணிககு வருத்தம் ஆச்சுது,

சீரிய தனம் உடையார் சேமித்து வாழுமாப் போலே.

சிரியர்க்கு அன்பு செய்.

சீரியர் கெட்டாலும் சீரியரே. 10945


சீரைத் தேடின் ஏரைத் தேடு.

(கொன்றை வேந்தன்.)

சீலம் குரு ஆகும்.

சிலை இல்லை என்று சிற்றாத்தாள் வீட்டுக்கு ஓடி வந்தாளாம்; :அவள் ஓலைப்பாயைக் கட்டிக் கொண்டு ஓடி வந்தாளாம்.

(ஈச்சம் பாயைக் கட்டிக் கொண்டு வந்தாளாம். சின்னாயி.)

சீலைப் பாய் ஈழம் போய்க் சீனிச் சர்க்கரை கட்டுமா?

(ஈயும் போய்.)

சீலைப் பேன் குத்துகிறான். 10950


சீலை மேல் சீலை கட்டித் தேவரம்பை ஆடினாலும் ஒலை மேல் எழுத்தாணி ஊன்றும் பெண் ஆகாது.

சீலையை விற்றும் சீலாவைக் கொள்; ஒலையை விற்றும் ஓராவைக் கொள்.

(யாழ்ப்பாணத்து வழக்கு)

சீவாத்துக் கிராமணி இருந்தும் கெடுத்தாள்: செத்தும் கெடுத்தான்.

(சிவரத்துப் பள்ளி, செங்கற்பட்டு மாவட்ட வழக்கு.)

சீவன் போனால் கீர்த்தியும் போகுமா?

(சிவனம், கீர்தித்யும்.)

சீவனம் செய்ய நாவினை விற்கேல். 10955


சீவனும் கெட்டது, வியாதியும் பொட்டென்று நின்றது.

(வியாதியும் கெட்டது.)

சீ விடு என்றாளாம் சிறு பருப்பில் நெய்யை.

சீறிய பாம்புக்குச் சிறியா நங்கை வேர்.

சீறி வரும் வடவாக்கினியைச் சிறு குட்டைத் தண்ணீர் அவிக்குமா?

சீறும் படையைக் கண்டு செடிக்குள் துழைகிறது. 10960


சீனி இட்டுக் காய்ச்சிய பால் தித்திப்பு இல்லை என்பது போல்,

சீனி என்று எழுதி நக்கினால் இனிக்குமா?