பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242

தமிழ்ப் பழமொழிகள்


சுமை தாங்கி ஆயம் தீர்க்குமா?

சுமை தாங்கி சுங்கம் இறுப்பது இல்லை.

(ஆயம் தீர்க்காது.)

சுமை போட்டால் பந்தலிலே காரியம் என்ன?

(பந்தாலே.)

சுயகாரிய துரந்தரன், சுவாமி காரியம் வழவழ.

சுயகாரி, துரந்தரன், பாகாரிய பராமுகன். 11115


சுயகாரியப் புலி.

சுரை ஆழ அம்மி மிதப்ப

சுரைக்காய் ஆனால் கறிக்குப் பாதி விதைக்குப் பாதியா?

சுரைக்காய்க்கு உப்பு இல்லை என்ற சொன்னானாம்.

சுரைக்காய்க்கு உப்பு இல்லை; பாகற் காய்க்குப் பருப்பு இல்லை. 11120


சுரைக் காய்க்கு உப்பு இல்லை; பீர்க்கங்காய்க்குப் புளிப்பு இல்லை;

சுரைக்காய் மிதக்கிறது; கல் அமிழ்கிறது.

(அம்மிக் கல்.)

சுரைப்பூ பறைப்பாட்டு.

சுரைப்பூவுக்கும் பறைப்பாட்டுக்கும் மணம் இல்லை.

சுலுமுக்கு ராம ராம. 11125


சுவர்க் கீரையை வழித்துப் போடடி, சுரனை கெட்ட வெள்ளாட்டி.

சுவரின் மறைவில் யாரடா? சுரக்காரன் பத்தியம் சாப்பிடுகிறேன்.

சுவரின்மேல் இருக்கும் பூனை இந்தப் பக்கம் குதித்தாலும் குதிக்கும்; அந்தப் பக்கம் குதித்தாலும் குதிக்கும்.

சுவருக்கும் காது உண்டு.

(காதுகள் இரண்டு)

சுவருக்கு மண் இட்டுப் பார்; பெண்ணுக்குப் பொன் இட்டுப் பார். 11130


சுவரை வைத்துக் கொண்டல்லவோ சித்திரம் எழுத வேண்டும்?

சுவரோடாவது சொல்லி அழு.

(ஆறு.)

சுவாசம் போனாலும் பிசாசம் போகாது.

சுவாதியில் வில் போட்டால் சொன்னபடி மழை

சுவான வைராக்கியம். 11135

(சுவானம் - நாய்.)