பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

243


சுள்ளாப்பு எல்லாம் பொல்லாப்பு.

சுள்ளைச் சுட்டுக் கொண்டு கள்ளைக் குடிக்கிறது.

(தொட்டுக் கொண்டு.)

சுற்றச் சுற்றத் தூசும் கிடைக்காது.

சுற்றத்தவரைப் பற்றி இரு.

சுற்றத்துக்கு அழகு சூழ இருத்தல். 11140


சுற்றத் துணியும் இல்லை; நக்கத் தவிடும் இல்லை.

சுற்றம் பார்க்கின் குற்றம் இல்லை.

சுற்றிச் சுற்றிச் சுங்கச் சாவடிக்கே வந்தது போல.

சுற்றிச் சுற்றி வந்தாலும் சுங்கக்காரனிடந்தான் வரவேண்டும்.