பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

தமிழ்ப் பழமொழிகள்



கட்டின வீட்டுக்குக் கருத்துக் கருத்துச் சொல்லுவார். 6400

(வாய்க்குச் சுளுவு.)


கட்டின வீட்டுக்குப் பணிக்கை சொல்லாதவர் இல்லை.

கட்டின வீட்டுக்குப் பழுது சொல்வது எளிது.

(வக்கணை சொல்வார் பலர்.)

கட்டினான் தாலி; காட்டினாள் கோலம்.

கட்டு அறிந்த நாயும் அல்ல; கனம் அறிந்த கப்பரையும் அல்ல.

கட்டுக் கட்டு விளக்குமாறு கப்பலிலே வருகிறது என்றால் ஒரு காசு விளக்குமாறு இரண்டு காசு. 6405


கட்டுக் கலம் காணும்; கதிர் உழக்கு நெல் காணும்.

(முக்கலம்.)

கட்டுக் காடை இடமானால் குட்டிச் சுவரும் பொன் ஆகும்.

கட்டுக்கு அடங்காக் காளை போல.

கட்டுக்கு அடங்காப் பிடாரியைப் போல,

கட்டுக்குக் கட்டு மாற்றிக் கட்ட வேண்டும். 6410


கட்டுக் குலைந்தால் கனம் குலையும்.

கட்டுச் சோற்று மூட்டையில் எலியை வைத்துக் கட்டினது போல.

(கட்டுச் சாதத்தில்.)

கட்டுச் சோற்று மூட்டையில் பெருச்சாளியை வைத்துக் கட்டின மாதிரி.

கட்டுச் சோற்று மூட்டையையும் கைக்குழந்தையையும் எடுக்கல் ஆகாது.

(கைப் பிள்ளையையும்.)

கட்டுச் சோறு எத்தனை நாளைக்கு? 6415


கட்டுத் தறியை விட்டு மேய்ச்சற் காட்டில் பிடிப்பது.

கட்டுத் துறை சரியாக இருந்தால் கன்றுக்குட்டி துள்ளி விளையாடும்.

கட்டுப் பட்டாலும் கவரிமான் மயிரால் கட்டுப்பட வேண்டும்; குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும்.