பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

31



கட்டிமகள் பேச்சு, கல்லுக்குக்கல் அண்டை கொடுத்தது போல். 6380


கட்டிய கட்டிலிருந்து கின்னரி வாசிக்கிறது போல.

கட்டில் உள்ள இடத்தில் பிள்ளை பெற்று சுக்குக் கண்ட இடத்தில் காயம் தின்பாள்.

(கஷாயம் குடிப்பாள்.)

கட்டிலின்மேல் ஏறியும் முறைபார்க்கிறது உண்டா?

(முறையா?) .

கட்டிலைத் திருப்பிப் போட்டால் தலைவலி போகுமா?

(போகும்.)

கட்டி வழி விட்டால் வெட்டி அரசாளலாம். 6385


கட்டி விதை, வெட்டி விதை. கட்டி வைத்த பணத்தைத் தட்டிப் பறித்தாற் போல,

கட்டி வைத்த பூனையை அவிழ்த்துவிட்டு, வாபூஸ் வாபூஸ் என்றால் வருமா?

கட்டிவைத்த முதல் அழியக் கச்சவடம் பண்ணாதே.

(கச்சவடம்-வியாபாரம். குமரி வழக்கு.)

கட்டின கோவணத்தைக் காற்றில் விட்டவன். 6390


கட்டின பசுப் போல்.

கட்டின பெண்சாதி இருக்கக் காத்தாயியைக் கண் அடித்தானாம்.

கட்டின பெண்டாட்டி பட்டி மாடு மாதிரி.

கட்டின பெண்டாட்டியையும் உடுத்தின துணியையும் நம்பாதவன்.

கட்டின மாட்டை அவிழ்ப்பாரும் இல்லை; மேய்த்த கூலியைக் கொடுப்பாரும் இல்லை. 6395


கட்டினவனுக்கு ஒரு வீடு; கட்டாதவனுக்கு ஆயிரம் வீடு.

(பல வீடு.)

கட்டினவனுக்கு ஒரு வீடு; கட்டாதவனுக்கு ஊரெல்லாம் வீடு.

கட்டின விதை வெட்டின விதை.

கட்டின வீட்டுக்கு எட்டு வக்கணை.