பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

45


கண்ட மங்கலத்து அஞ்சு பெண்களும் ஒருத்தர் போன வழி ஒருத்தர் போகார். 6685


கண்ட மாப்பிள்ளையை நம்பிக் கொண்ட மாப்பிள்ளையைக் கைவிட்டாற் போல.

கண்டர மாணிக்கத்துக் கட்டுத் தறியும் வேதம் சொல்லும்.

கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்.

கண்டவன் எடுக்கானா?

கண்டவன் எடுத்தால் கொடுப்பானா? 6690


கண்டவன் கொள்ளையும் கணியாகுளப் போரும்.

(கணியாகுளம் குமரிமாவட்டம்; 1635 நாயக்கர் படைதங்கிப் போரிட்டது.)

கண்டவன் விலை சொன்னால் கொண்டவன் கோடி உடான்.

(யாழ்ப்பாண வழக்கு.)

கண்டார் கண்டபடி பேசுகிறது.

(பேசுகிறார்கள்.)

கண்டாரைக் கேட்டாரைச் சொல்லாதே. கண்டால் அல்லவோ பேசுவார் தொண்டைமான்? 6695


கண்டால் ஆயம்; காணா விட்டால் மாயம்.

(ஆயம்-வரி.)

கண்டால் ஒரு பேச்சு; காணா விட்டால் ஒரு பேச்சு.

கண்டால் ஒன்று; கானா விட்டால் ஒன்று.

கண்டால் கரிச்சிருக்கும்; காணா விட்டால் இனித்திருக்கும்.

கண்டால் காமாட்சி நாயக்கர்; காணா விட்டால் காமாட்டி நாயக்கன். 6700

(கவரை வடுகன். காணா விட்டால் மீனாச்சி நாயக்கன்.)


கண்டால் காயம்; காணாவிடில் மாயம்.

கண்டால் சரக்கறியேன்; காணாமல் குருக்கறியேன்.

கண்டால் கீச்சுக் கீச்சு; காணா விட்டால் பேச்சுப் பேச்சு.

(கிளி.)