பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

தமிழ்ப் பழமொழிகள்


பேர் பதினெட்டாம் பேறு.

பேர் பெத்தப் பேர்.

(பெத்த-பெரிய: தெலுங்கு.)

பேர் வைத்துப் பேர் தாக நீருலேது. 17295

(தாக-குடிக்கலேது இல்லை. தெலுங்கு.)


பேர் பெரிய பேர்; குடிக்கப் போனால் நீர் கிடையாது.

பேர் பெற்றான் செம்பரம்பாக்கத்தான்; நீர் பெற்றான் மாம்பாக்கத்தாள்.

பேர் பொன்னம்மாள்; கழுத்தில் கருகுமணி.

(கறுப்பு மணி.)

பேர் பொன்னாத்தாள்; கட்டக் கரிய மணி இல்லை.

(கசிய மணிக்கு வழி இல்லை.)

பேர் போனாலும் பிள்ளைப் பட்டம் போகவில்லை. 17300


பேர் முத்துமாலை; கட்டக் கரிமணிக்கு வழி இல்லை.

பேராசைக்காரனுக்குத் தீராத நஷ்டம்.

பேராசைக்காரனுக்குப் பெரும்புளுகன் தானாபதி.

பேராசைக்காரனைப் பெரும் புளுகால் வெல்லவேண்டும்.

(வென்றாற் போல.)

பேராசை கொண்டு பெருக்கத் தவிக்கிறது. 17305


பேராசை தரித்திரம்; தீராத உபத்திரவம்.

பேராசைப் பூண்டு பெருந்தொகையை இழப்பது போல.

பேராசை பெருங்கேடு.

பேராசை பெரு நஷ்டம்.

பேரிளமை கடந்த பின் பிள்ளை பெற்று எடுத்தாற்போல. 17310


பேரின்பம் வேண்டின் சிற்றின்பம் ஒழிக்க.

பேரூர்க் குடியிருப்பும் சிற்றுரர் வேளாண்மையும்.

பேரைச் சொன்னால் அழுத பிள்ளையும் வாய் மூடும்.

பேளச் சொன்னது யார்: வாரச் சொன்னது யார்? பேளப் போன இடத்தில்

பேரை மறந்து விட்டதாம். 17315


பேளப் போன இடத்தில் விளங்காய் அகப்பட்டது போல.

பேளுகிற கிழவியும் எழுந்திராள்.

பேன் இராக தலை கடிக்குமா? பேய் இராத தலை ஆடுமா?

(தலை அளக்குமா?)

பேன் கட்டிக் கல் இழுப்பது போல.

(யாழ்ப்பாண வழக்கு.)

பேன் பார்த்தாலும் பார்க்கும்; காதைப் பிய்த்தாலும் பிய்க்கும் குரங்கு. 17320