பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

தமிழ்ப் பழமொழிகள்




பொறுத்தார் பூமி ஆவிவார். பொங்கினவர் காடு ஆள்வார்.

பொறுத்தான் பொறுத்தான் என்று போகிறவன் குட்டுகிறதா?

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தானாம்; வெட்கம் இன்றிக் கேட்டானாம். 17475


பொறுமைக்குப் பூமிதேவி.

பொறுமை கடலினும் பெரிது.

பொறுமை தன்னையும் எதிரியையும் காக்கும்.

பொறுமை புகழ் தரும்.

பொறுமை புண்ணியத்துக்கு வேர்; பொருளாசை பாவத்துக்கு வேர். 17480


பொறுமை பூமி ஆளும்.

பொறுமை பெருமைக்கு அழகு

பொறுமையில் சிறந்தவள் பூமாதேவி.

பொறுமை பூஷணம்.

பொன் அகப்பட்டால் பொன் முடியத் துணி அகப்படாதா? 17485


பொன் அகப்பட்டாலும் புதன் அகப்படாது.

பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.

பொன் இடப் பொன் இடப் பெண் அழகு, மண் இட மண் இட மாடம் அழகு.

பொன் இடப் பொன் இடப் பெண்ணும் சிறக்கும்; மன் இட மண் இடச் சுவரும் சிறக்கும்.

பொன் இரவல் உண்டு; பூவை இரவல் உண்டா? 17490


பொலி உருகக் காயும், மண் உருகப் பெய்யும் புண்ணியப் புரட்டசி.

(மணவாளர் புரட்டாசி. }

பொன் உள்ள இடம் மின்னும், பூ உள்ள இடம் மணக்கும்.

பொன் ஊசி எனறால் கண்ணைக குத்திக் கொள்ளலாமா?

பொன் என்றால் பிணமும் வாய் திறக்கும்.

(கொட்டாவி விடும்.)

பொன் ஒன்று பணிகள் பல. 17495


பொன் கத்தி என்று கழுத்தை அறுத்துக் கொள்ளலாமா?

(மார்பில் குத்திக் கொள்ளலாமா?)

பொன் கலம் ஆகிலும் மண் சுவர் வேண்டும்.

பொன் களங்கபபட்டால் புடம் போடலாம்; பெண் களங்கப்பட்டால் என்ன செய்வது?