பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

43


மதயானையை அடக்கக் கோணி ஊசியைத் தேடினானாம்.

மதயானையை அடக்குவார் உண்டா?

மதலைக்கு இல்லை கீதமும் அறிவும்.

மதனிக்கு வெள்ளைச் சாதமா? 17890


மதனும் ரதியும் போல் வாழ்ந்திருக்க வேண்டும்.

மதாபிமானம், ஜாதி அபிமானம், தேசாபிமானம்.

மதி இருக்க விதி இழுக்கும்.

மதி இல்லாத விண் ஆனேன்: மருந்து இல்லாத புண் ஆனேன்.

மதி கெட்ட வேளாளன் சோற்றை இழந்தான். 17895


மதி பாதி மருந்து பாதி.

மதி புதன் மயிர் களை.

மதி மோசமோ விதி மோசமோ?

மதியாத வாசலில் மிதியாதிருப்பதே உத்தமம்.

மதியாதார் தலைவாசல் மிதியாதே 17900


மதியாதான் வாசலிலே வல்லிருளே ஆனாலும் மிதியாமல் இருப்பதே கோடி பெறும்.

மதியும் உமது; விதியும் உமது.

மதியை மீன் சூழ்ந்தது போல.

(மீன் - நட்சத்திரம்.)

மதியை விதி மறைக்கும்.

மதியை வெல்ல வேதனாலும் முடியாது. 17905


மதில்மேல் இருக்கிற பூனை போல் இருக்கிறான்.

மதில்மேல் ஏறிய பூனை எந்தப் பக்கமும் குதிக்குமாம்.

மது பிந்து கலகம் போல் இருக்கிறது.

மதுரம் இல்லாக் கவி போல.

மதுரைக்கு தெற்கே மரியாதை இல்லை. 17910

(கொங்கு தாட்டு வழக்கு.)


மதுரைக்கு வழி எங்கே? வாயிலே.

மதுரை பாராதவன் கழுதை.

மதுரையில் அடிபட்டு மானாமதுரையில் மீசை துடித்ததாம்.

மதுரையில் பூசணிக்காய் மாட்டு விலை.

மதுரையில் மூட்டை தூக்கச் செங்கல்பட்டில் சும்மாடா? 17915


மதுரையைப் பார்த்தவனும் கழுதை, மதுரையைப் பார்க்காதவனும் கழுதை,

மதுவும் மாதரும் தீமையின் அஸ்திவாரம்.