பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

73



மீ

மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது. 18615


மீசை அடிப்பதற்காகவா அப்பன் சாக வேண்டும்.

மீசை இல்லா முகமும் மேனி இல்லா அழகும் பாழ்.

மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை.

மீசையை முறுக்கி வளர்; முருங்கையை முறித்து வளர்.

மீதூண் விரும்பேல். 18620


மீந்த சுண்ணாம்பையும் மெலிந்த ராஜாவையும் கைவிடக் கூடாது.

மீன் இருக்கப் புளியங்காயைத் தின்னுமா?

மீன் குஞ்சுக்கு நீச்சுப் பழக்குகிறதா?

மீன் குழம்போ? தேன் குழம்போ?

மீன் செத்தபோதே சினை செத்துப் போச்சுது. 18625


மீன் தண்ணீர் குடித்தாற்போலே.

மீன் தின்னாத கொக்கும் உண்டோ?

மீன் பிடிக்கிறவனுக்குத தூண்டிலிலே கண்.

மீன் விற்ற காசு நாறுமா?

மீன் விற்ற காசு பார்ப்பானுக்கு ஆகாதா? 18630


மீன மேஷம் பார்க்கிறது.

மீனுக்கு நீச்சம் கற்றுக் கொடுக்க வேண்டுமா?

மீனுக்கு வாலைக் காட்டு; பாம்புக்குத் தலையைக் காட்டு.

மீனும் செத்தது. சினையும் செல் அரித்துப் போயிற்று.

மீனை மீன் விழுங்கினாற்போல். 18635