பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

தமிழ்ப் பழமொழிகள்


முட்ட நனைந்தவனுக்கு முக்காடு என்ன?

முட்ட நனைந்தார்க்குக் குளிர் இல்லை. 18685


முட்டம் கோடி முப்பத்திரண்டு அணைகள்.

முட்டரோடு ஆடிய நட்பு. கருங்காலிக் கட்டை ஊடாடிய கால்.

முட்டாக்குப் போட்டு மூலையில் உட்கார்த்தி வைத்த பிறகும் மெச்சிக் கொள்வதற்கு எச்சில் இலை எடுத்தாளாம்.

முட்டாள் என்ன சொன்னாலும் கட்டோடே கேளான்.

முட்டாள்களில் முட்டாள் கிழ முட்டாள். 18890


முட்டாள் தனத்துக்கு முதல் பாக்குக்காரன்.

முட்டாள் நாயக்கனும் முரட்டுத் துலுக்கனும் பட்டாளத்துக்குத்தான் சரி.

முட்டாள் பயலுக்கு இரட்டைப் பிரியம்.

முட்டாள் பிடித்த முயலுக்கு மூன்று கால்.

முட்டாள் பையனுக்கு இரட்டைப் பெண்டாட்டி. 18695


முட்டாள் முண்டத்துக்கு இரட்டைப் பிரியம்.

முட்டாளுக்கு இரண்டு ஆள்.

(எட்டு.)

முட்டாளுக்கு என்ன சொன்னாலும் கட்டோடே கேளான்.

முட்டாளுக்குக் கோபம் மூக்கின் மேலே.

முட்டாளுக்குத் தன் குணம் நூலிலும் செம்மை. 18700


முட்டாளுக்குப் பட்டால் தெரியும்.

முட்டாளுக்கு முட்டாள் தண்டனிட்ட விண்ணப்பம்.

முட்டாளுக்கு முழங்காலில் புத்தி.

முட்டாளுக்கு மூன்று இடத்திலே மலம்.

முட்டாளுக்கு மோர் அதிகம். 18705


முட்டாளுக்கு மோருஞ் சாதம்

முட்டாளும் சட்டை செய்யான்.

முட்டி ஊட்டின குட்டி முதார் குட்டி.

(மூட்டி ஊட்டின கன்று முதற்கன்று.)

முட்டிக் கால் கழுதை பட்டவர்த்தனப் பரி ஆகுமா?

முட்டிக்குப் போனாலும் முகராசி வேண்டும்; பிச்சைக்குப் போனாலும் பேர் ராசி வேண்டும்; அவிசாரி போனாலும் அதிர்ஷ்டம் வேண்டும். 18710