பக்கம்:தமிழ்மாலை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

இக்கவிதைக் கதைதான் அப்படியே அடிகளாரின் உரைநடைக் கதையில் உள்ளதன்றோ? அடிகளார் புதினம் படைத்த ஐந்தாறு ஆண்டுகளுக்குப் பின்னே பாவேந்தர் பாடல் எழுந்திருக்கலாம்.ஆனால், கோகிலாவைப் பார்த்துப் பாவேந்தர் எழுதியதாகக் கொள்ளவேண்டியதில்லை. இரண்டும் வெவ்வேறு முளைவயலில் முளைத்த வெவ்வேறு பயிர்ப்படைப்புசளே.

அடிகளார்கதையைத் தொடர்ந்தால்,

சிறுமி கோகிவா பருவமங்கையாகி 'வேரிற் பழுத்த பலாவாய்க்

கோரிக்கையற்றுக் கிடந்தாள். கோரிக்கை புதிதாகப் பக்கத்து வீட்டுக் காளை தெய்வநாயகத்திடமிருந்து கண்வாயிலாகத் தோன்றி இரு பருவக் கருத்துக்களிடமும் காதலைமலர்த்தியது.மாமிநாத்திகழந்து வருத்துகின்றனர் சொற்களால் கோகிலாமேல்நாம் செலுத்தும் இப்பார்வையோடு பாவேந்தரின் மற்றொரு பாடலுக்குச் செல்வோம்:

"தோட்டத்து வாசல் திறந்திருக்கும்-அங்கு

சொர்ணம் வந்தால் கொஞ்ச நேரம்மட்டும் வீட்டுக் கதைகளைப் பேசிடுவாள்-பின்பு

வீடு செல்வாள் இது வாடிக்கையாம்”

இந்த வாடிக்கை அந்த வீட்டிலுள்ள கட்டிளங்காளை சுந்தரத்துடன் குலாவ வைத்துவிடுகிறது. இருவரும் பாவேந்தர் சொல்லில்,

“வெள்ளத்தி னோடொரு வெள்ளமுமாய்-நல்ல

வீணையும் நாதமும் ஆகிவிட்டார்” இதனைக்கண்டுஇருவரின்தாயரும்'நீகைம்பெண்ணடிகைம்பெண்.இப்படிச் செய்துவிட்டாயே” என்று பொரிந்தனர். குற்றம் மறுத்திடக் காரணங்கள் கோடியிருந்தும் காதலர்கள் கண்ணி வடித்தனர்.ஆனால் அடிகளார் படைத்த கோகிலா சற்று மறுபட்டவள். அவளை அடிகளார் இவ்வாறு அறிமுகஞ் செய்கிறார்:

'கோகிலா பார்ப்பனக் குடிப்பெண்; ஆனால் இப்பற்றில் அகப்படாத

தூய்மையும் நுண்ணறிவும் கொண்டவள். கற்பொழுக்கம் உடையவள். அவள் தமிழ்நாட்டு முதலியார்குடியைச் சேர்ந்த தெய்வநாயகத்தைக் காதலிக்கிறாள். தெய்வநாயகத்தைக் கோகிலாவிட்டார் சூழ்ச்சியால் தில்லிக்கு ஒட்டிவிட்டனர். கோகிலா முடங்கல்கள் வழி காதலை வளர்த்தாள். இவ்வாறு கடிதங்கள் 17 வளர்கின்றன. முடங்கல்கள்17-உம் ஒரே கைதான் எழுதுகின்றது. பதினேழும் கோகிலாவின் முடங்கல்களே. எனவே, முடங்கல் போக்குவரத்து இல்லை; போக்குதான். இது ஒருவழி முடங்கல் காதல் வளர்ச்சி. இறுதியில் தெய்வநாயகம் மறைமலையடிகளார்க்கு எழுதிய முடங்கல் கதையை நிறைவேற்றுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/101&oldid=687169" இலிருந்து மீள்விக்கப்பட்டது