பக்கம்:தமிழ்மாலை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

அஞ்சலட்டைகள் விடுத்துள்ளார். நாள்தோறும் எவருக்கேனும் முடங்கல் எழுதும் பழக்கத்தைப்பல்லாண்டுகளின் முன்னே தொடங்கி வாழ்விறுதிவரை கைக்கொண்டுள்ளார்.

1898 முதல் 1950 வரை 52 ஆண்டுகள் தொடர்ந்துநாள்தோறும் தவறாது நாட்குறிப்பை ஆங்கிலத்தில்எழுதிவந்துள்ளார்.நாட்குறிப்பை ஆங்கிலத்திலேயே எழுதியுள்ளார்.அதற்கு அடிகளார் கூறிய காரணம் தமிழில் எழுதியும் பேசியும் வருவதால் ஆங்கில அறிவுதளராமல் இருப்பதற்கு என்பதாகும்.

ஒரு புத்தாண்டு நாளில் (1.1.1899) பாலையூரிலிருந்து கொரடாச்சேரி வந்தவர் "அன்றே திருவாரூர் சென்று ஆசிரியர் திரு வே. நாராயணசாமி பிள்ளையவர்களைக் கண்டுவனங்கவேண்டும்"என்றுகுறித்திருப்பது அவர் தம் நல்ல பண்பாட்டைப் பேசுகிறது. நூல்களைத் தொகுப்பது, குறிப்பெடுப்பது, நூல்களை முடித்தது போன்ற குறிப்புகள் அவர்க்கே பிற்காலத்தில் புரட்டிக் கண்டுநூல்களில் குறிக்கப் பயன்பட்டுள்ளன.

பாரதியார் நான்கு திங்கள் கவிதை எழுதாமல் கழித்ததை எண்ணிக் கனன்று கலைமகளிடம் முறையிட்டு வேண்டினார்: -

“மாதமோர் நான்காய்நீர் (கலைமகள்)-அன்பு வறுமையிலே (கவிதைச்செல்வம் படைக்காத வறுமையில்) என்று வைத்துவிட்டீர்” இதுபோன்று அடிகளார் சில நூல்களைப் படிக்காமல் எண்ணிக் கவன்றதைக் குறித்துள்ளார். தமிழ், ஆங்கிலம், வடமொழி நூல்களை வாங்குவதில் சளைக்காத அடிகளார். இன்று இன்னின்ன நூல்களை வாங்கினேன்' என்று பட்டியலிட்டுள்ளார். அத்துடன் நூலாசிரியர்கள் பற்றிய தம் உணர்வுகளை நாட்குறிப்பில் வெளிப்படுத்தியுள்ளார். செல்லி, மில்தன், ஆர்னால்டு, கீத்சு முதலானோர் நூல்களை வாங்கியதைக் குறிக்கின்றனர். அதே எழுத்தோட்டத்தில் 'நான் கவி பைரனை மிகவும் வெறுக்கிறேன்” என்று எழுதியுள்ளமை கருதத்தக்கது.பைரன் காலத்திலேயே அவர்தம் கவிதைகளை 'எடின்பரோ ரெவ்யு என்னும் இதழ் பாராட்டிஎழுதியதை அடிகளார் படித்துள்ளார். கடவுளை ஏற்காதவராகிய செல்லியை மிகவும் விரும்புகின்ற அடிகளார் பைரனின் செல்வநிலை உயர்வையும், சில கொள்கைகளையும் எண்ணிப் பார்த்து அவரை வெறுப்பதாக எழுதினார். பைரன் இயற்கையைப் பாடுவதில் வல்லவராயினும், அவர்தம் ஒவ்வாக் கொள்கைகள் கருதி அவரை வெறுப்பதாகக் குறித்தமை அடிகளாரின் கோட்பாட்டுநிலையைக் காட்டுகிறது.

உணர்வுப் பதிவு

“கல்லில் நார் உரிப்பதுபோன்று வருந்தித் தேடிய 300 உரூவா தொலைத்தது பற்றிக் கவன்றதும், பல ஆண்டுகளுக்குப் பின்னர் நாகையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/111&oldid=687179" இலிருந்து மீள்விக்கப்பட்டது