பக்கம்:தமிழ்மாலை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

இராவணன் முருகன் தலைகள்

கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து பேரார்வத்துடன் அழைத்திருந்தவர் ஒர் இளைஞர். அப்போதுதான் வழக்கறிஞர் படிப்பில் தேறியவர். அவர் நன்றி கூறும்போது இந்த நகைச்சுவையைத் தொட்டு 'இராவணன் பத்துத் தலைகளுடன் எவ்வாறுபடுத்திருப்பான் என்று அடிகளார் கேட்டார்கள்.அவன் ஆறு தலைகளையுடைய முருகன் படுத்ததுபோல் படுத்திருப்பான்" என்றார். இஃது அடிகளார் போற்றும் முருகனை மலிந்த நகைச் சுவைக்குள்ளாக்குவதன்றோ! கூட்டம் இதனையும் சுவைத்தது. அதில் குறிப்பிடத்தக்கது அடிகளாரும் அதனை நகைச்சுவையாகவே ஏற்றுப் புன்முறுவல் பூத்ததாகும். ஒரு காப்பியத்தில் வரும் மன்னனை அதிலும் கெட்டவனாக வைக்கப்பட்டுள்ளவனை நகைச்சுவையில் வாட்டியது சொற்பொழிவாளரால் ஏற்கத்தக்கதாகும். பொழிவாளர் இடைமறித்தேனும், அதற்குமறுப்போ கண்டனமோ தெரிவிக்க வேண்டியதாகும்.மாறாக அடிகளார் புன்முறுவலில் அதை அடக்கியதற்குக் காரணம் உண்டு.

அக்காரணம் அடிகளார் முருகன் உருவத்தை வரிவடிவமாகக் கொள்ளாமல் அருவாகக் கொண்டதேயாகும். ஆறு தலைகளைக் கொண்ட கதைகளையெல்லாம் சாடும் அடிகளார் முருகனின் அத்தகைய வடிவத்திற்கு வன்மையான காரணம் கூறியுள்ளார்.

தமிழர் கடவுள் வணக்கமுறை கதிரவன் வழிபாட்டில் தோன்றியதாகக் கொண்டவர் அடிகளார்.

“உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாங்கு'

என்னும் திருமுருகாற்றுப்படைத்துவக்க அடிகளை எடுத்துக்காட்டிஞாயிற்றின் தோற்ற வணக்கத்தை விளக்கியுள்ளார். அவ்விளக்கத்தில் முருகக்கடவுளின் உருவம் பற்றிய உருவக வண்ணனையை எழுதினார்.

'முருகன் அருள் உருவினன்; அதிலும் அருள் ஒளியானவன், நுண்ணறிவில்லா மாந்தர்க்குத் தன் அருள் ஒளியை ஒளியிற் சிறந்த கதிரவன்போல் நின்று காட்டினான். அக்கதிரவனின் பொன்னொளித் தோற்றமே முருகனின் ஒளிவடிவம், அவன் விடியலில் தோன்றும் இளஞாயிறாகக் காட்சியளிக்கின்றான். அவன் இளமையன் அல்லனேர் ? இதனால்தான் முருகு' என்பதற்கு இளமை' என்னும் பொருள் வந்தது. அத்தோற்றம் அழகுடையதாதலின் அழகு என்னும் பொருளும் கூடிற்று. ஞாயிறும் தெய்வத் தன்மையின் குறியாகலின் தெய்வத்தன்மை என்னும் பொருளும் செறிந்தது. எனவே, இளஞாயிற்றின் ஒளிவடிவே முருகனின் வடிவம் விடியல்வான் நீலவானத்தின் விரிந்தநிலத்தையும் கடலின் நீலத்தையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/43&oldid=687103" இலிருந்து மீள்விக்கப்பட்டது