பக்கம்:தமிழ்மாலை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

முருகன் உருவகத்தைத் தொடர்ந்து பிற கடவுளர் இருவரையும் உருவகப்படுத்திய பாங்கும் இங்கு நினைவுகூரத்தக்கது. வைணவத்தை அடிகளார் முழு அளவில் ஏற்றுக்கொள்ளாது ஒரளவில் இசைவில் வைத்துள்ளார். அதனால் திருமால்வடிவத்தையும் செயலையும் இளஞாயிற்றின் தொடர்கதையாகவே காண்கின்றார்.

திருமால் மாவலி என்னும் மாமன்னனிடம் அவனை அழுத்த மூன்றடி மண்கேட்டுப் பெற்று ஒரடியால் மண்ணுலகையும், இரண்டாம் அடியால் விண்ணையும் அளந்துவிட்டு மூன்றாவது அடிக்கு இடமெங்கே எனக் கேட்டதாகவும், மாவலி என் தலைமேல் வை: என்றதாகவும், அவ்வாறே செய்து மாவலிய்ை அழுத்தி அழித்ததாகவும் கதை உண்டு. அது பத்து தோற்றரவுகளில் வாமணன் தோற்றரவாக உள்ளது. பத்துத் தோற்றரவுகளும் பொய்க்கதை என்னும் அடிகளார் மூன்றடி அளந்ததைப் பகல்நேரப்பாகுபாட்டில் வைத்துச் சொல்கிறார்.

“அடியளந்தான் தாயதெல்லாம் ஒருங்கு" என்னும் குறட்பாவும் அவர்தம்நினைவில் நின்றிருக்கும். அனைத்திற்கும் அவர் தரும் உருவகச் செய்தி” இது: - -

“காலையிலெழுந்த ஞாயிறு காலைப் பத்துமணி வரையில் வான்வெளியை ஒரு கூறு, அளந்து, பத்து மணி முதல் இரண்டுமணி வரையில் அவ்வெளியின் நடுக்கூற்றினை அளந்து, இரண்டு மணி முதல் மாலை ஆறு மணி வரையில் அதன் மற்றொரு கூற்றினை அளந்து இயங்குவதாகிய இயக்கமே திருமால் மூவடியால் மூன்றலகு அளந்தார் என்னும் கதையின் உண்மைப் பொருளாகும்' " இந்த இயற்கைச் செயலே திருமால் மூவடி அளந்த செயல் என்று பகுத்தறிவில் நின்று பேசுவதாகவே கொள்ள வேண்டும். சைவப்பகுத்தறிவு முழக்கத்தோடு இது வைணவப் பகுத்தறிவு முழக்கம்.

பகல் ஞாயிற்றுக் கதை தொடர்கிறது. அது அந்திப்போது ஞாயிற்றைக் காட்டிச் சிவபெருமானை உருவகத்தில் நிறுத்துகிறது.

“காலையிலெழுந்து நடுப்பகலில் இயங்கி மாலையில் மேல்பால் வ்யங்கும் ஞாயிற்றில் நிற்பானான முதல்வனே சிவபெருமானென்வைத்துப் பண்டைச் சான்றோரால் வழிபடப்பட்டவன்' " . என்று ஞாயிறே சிவன் என்று காட்டி இதனிடையே பகல்நேரக் கால அளவில் நிறுத்திய வைணவத் திருமாலைச் சிவனுக்குள் அடக்குதல் சைவ சமயத்துள் வைணவம் அடக்கம் என்பதாக உள்ளது. அந்தி ஞாயிற்றை, வானை வைத்துப் பின்வருமாறு சிவபெருமானை உருவகப்படுத்துகிறார்: -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/45&oldid=687105" இலிருந்து மீள்விக்கப்பட்டது