பக்கம்:தமிழ்மாலை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

நெஞ்சுறுதி என்னும் பாறையும், புகழ் என்னும் மலைமுகடும், பாராட்டிப் போர்த்திய பொன்னாடை என்னும் முகிற்குழாமும், போற்றியும் வாழ்த்தியும் சொரிந்த மலர் மாரி என்னும் மழைப் பொழிவும் ஒன்றுகூடிக் காட்சி தரும் தோற்றம் ஒரு - மலையாகவே திகழ்ந்தது. எனவே அடிகளார் தம் பெயருக்கேற்ப ஒரு மலையே.ஆனால்இவர் கருத்தாலும் புகழாலும் மறையாத மலை, தமிழ் மறைமொழிகளை வெளிப்படுத்தியதால் மறைமலை.இவற்றை உணர்ந்தது போன்று அந்நாள் சட்டப் பேரவைத்தலைவர் திரு.சே.சிவசண்முகம் அவர்கள் இவரை,

"இமயமலை பொதியமலை இவற்றையெல்லாம் விட பெரியமலை நம் மறைமலை' -

என்று பாராட்டியுள்ளார்.

"மனித்த இனம் தலைநிமிரச் செய்த மாண்பு

மறைமலையார் சொற்பொழிவு மலையென் பேனே'

என்றும்,

“மற்றொருவர் இப்பிறப்பிலுண்டோ பேச?

மறைமலையார் சொற்பொழிவு மலையென்பேனே' என்னும் அடுக்கியடுக்கிப்புகழ்ந்தார் கவிஞர் வாணிதாசனார்.

மேற்சொன்ன மலை உருவகத்தை உருவாக்க அடிகளார் தம் நாவே காரணம்.நாநலத்தால் உருவான மலை மறைமலை. வாய் என்னும் அறைக்கும் பற்களாம் கோட்டைக்குள் ஊறும் உமிழ் என்னும் ஊற்று சூழஇதழ்கள் என்னும் கதவுகளுக்குள் அடங்கியநாதான் உலகங்காணும் பெருமலையாய் ஆக்கிற்று. ஆம் மறைமலை அடிகளார்.நாவால் ஒரு மலை, அஃதே காயாலும்-கை கூழங்கி எழுத்தாலும் ஒருமலை என்பதும் அறியத்தக்கது.

இ. கையால் மலை

'கை' என்னும் சொல் உறுப்பைக் குறிக்கும். அது நேர்பொருள் அன்று. செய்' என்பதே கை ஆயிற்று.திராவிட மொழிகளில் இன்னும் செய்கையைக் குறிக்கிறது.செய்வதால்தான் கையிற்கு இப்பெயர் வந்தது.கால்நடக்கிறது:கண் பார்க்கிறது; காது கேட்கிறது. இவ்வாறு ஒவ்வோர் உறுப்பும் ஒவ்வொன்றைத் தன் தன் செயலாகச் செய்யினும் செய்தல்' என்னும் தொழில் கைக்குரியது. எச்செயலும் செயற்படக் கைதான் முன்னின்று உதவுகிறது. அதனால்தான் அதற்குக்கை என்னும் பெயர் அமைந்தது.'செய்கை என்னும் செயற்பாட்டுச் சொல்லிலும் 'கை' அமைந்து அங்கு தொழிற்பெயர் இறுதி நிலையாகச் செயலையே வலியுறுத்திநிற்கிறது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/60&oldid=687120" இலிருந்து மீள்விக்கப்பட்டது