பக்கம்:தமிழ்மாலை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

மாந்தலடின் தொடக்ககாலத்தில் செய்கைதான் பேச்சுமொழிக் குறியாக இருந்தது. கையை அசைத்தே கருத்தை வெளிப்படுத்தினர். அச்செய்கைமொழிதான் பின்னர் சைகை மொழி எனப்பட்டது.

'கை' என்னும் சொல்லுக்கே செய்தல் என்னும் பொருள் மீண்டது. இக்கியங்களிலும் இலக்கணங்களிலும் கையறுநிலை என்பது ஒன்று.

'கழிந்தோர் தேஎத் தழிபடர் உறிஇ ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும்' என்னும் தொல்காப்பியநூற்பா சொல்லும் கையறுநிலைக்குச்செயலற்றநிலை என்று பொருள் எழுதினர். ஏதும் திடீரென்று துன்பம் அல்லது இடையூறு வந்தால் கைகளைப் பிசைந்துகொண்டு கலங்கிநிற்பதைப் பார்க்கின்றோம்.

s

கைக்குச் செயல்' என்னும் பொருள் மட்டுமின்றி ஒழுக்கம் என்னும் பொருளும் உண்டு. "கையொன்றறிகல்லாய்” என்னும் கலித்தொகைச் சொல்லுக்குச் செயலறியாதவனே என்றும் ஒழுக்கம் அறியாதவன் என்றும் பொருள். கைகோள் வகையே என்னும் தொல்காப்பியச் சொல்லுக்குப் பேராசிரியர் கைகோள் என்பது ஒழுக்கங் கோடல் என்று பொருள் விரித்தார். இதனை வைத்தேநம்பியகப்பொருள் ஆசிரியர்,"களவு கற்பெனவிருகைகோள் வழங்கும்” என்னும் நூற்பா படைத்தார்.திருவள்ளுவரும்.

'பொய்படும் ஒன்றோ புனையூனும் கையறியாப் பேதை வினைமேற் கொளின்" என்னும் குறளில் கையறியா என்றார்.இதற்கு மண்க்குடவர் ஒழுக்கமறியாத என்றெழுத காளிங்கரும் அதனையே கொண்டு மொழிந்தார். பரிமேலழகர் "செய்யும் முறையறியாத' என்னும் செயல் என்னும் பொருளைக் கொண்டு எழுதினார். - •

"இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல் "

என்னும் குறட்பாலில் உள்ள கையாறா' என்பதற்கு இடும்பை என்று பரிமேலழகர் குறித்து, மேலும், "இதற்கு ஒழுக்க நெறி என்று உரைப்பாரும் உலர்” என்று குறிக்கக்காளிங்கர் ஒழுக்க நெறி' என்றே எழுதினார்.

எனவே, 'கை' என்பதற்குச் செயலுடன் ஒழுக்கம் என்னும் பொருள் உண்டு.

கைபற்றி இத்துணை விவரமாகக் குறிக்கும் நோக்கம் கையால் எழுதும் செயல் ஓர் ஒழுக்கமும் ஆகும் என்பதைக் காட்டவே.எழுதும் செயல் எழுதல்' எனப்படும். அதற்கு எழுதுகை என்னும் சொல்லமைப்பும் உண்டு எழுதுகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/61&oldid=687121" இலிருந்து மீள்விக்கப்பட்டது