பக்கம்:தமிழ்மாலை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

நூல்கள் மறைமலையடிகளாரால் எழுதப்பெற்றன. எழுத்துத் துறையில் முதல்முதலாக அவர் படைத்தது இக்கோட்பாட்டுக் கருத்துக்கள்தாம்.

வாழ்வியல் நூலாகிய "மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை” என்பது படைத்தலைவர் காடர்ட்டைமண்ட் எழுதிய'நீண்ட நாள் உயிர் வாழ்க்கை' என்னும் நூலைப்படித்த உந்துதலால் எழுதப்பெற்றது என்று கண்டோம். இது போன்றே அடிகளார் நூல் ஒவ்வொன்றும் ஏதேனும் ஒரு நிகழ்ச்சியையோ, நூலையோ,உணர்வுத்தூண்டுதலையோ உந்துதலாகக் கொண்டே எழுந்தது. முதன்முதலில் எழுதும் உணர்வை எழுப்பியது நாகைக்கு வந்த சொற்பொழிவாளர் பேச்சும், பிறர் வெளியிட்ட சிறு வெளியீடுகளுமேயாகும். இவ்வுந்துல்களால் எழுத்துருவம் பெற்ற நூல்கள் மூன்று, "முனிமொழிப் பிரகாசிகை","வேதசிவாகமப்பிரமாண்யம்","வேதாந்தமத விசாரம்" என்னும் இவை. இவை முறையே 1898, 1899, 1900 ஆண்டுகளில் தனித்தனி வெளியீடுகளாக வந்து பின்னர் மூன்றும் ஒரு தொகுப்புநூலாக “சித்தாந்த ஞானபோதம்" என்னும் தலைப்பில் வந்தன. முனிமொழி பிரகாசிகை என்பது 12 பக்கங்களே கொண்ட சிறு வெளியீடு.தமிழறிஞர் சபாபதிநாவலர் என்பார்,

"தேவர் குறளுந் திருநான் மறைமொழியும் - மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவா சகமும் திருமூலர் சொல்லும்

ஒருவா சகமென் றுணர்'

என்னும் அவ்வையார் பாடலுக்கு உரைவிளக்கம் எழுதினார். அதில் முனி மொழி என்றதற்கு வியாச சூத்திரம் என்று காட்டினார். இதனை மறுத்து அடிகளார் எழுதியதே'முனிமொழிப் பிரகாசிகை. முனிமொழி என்ற அவ்வை தொடருக்குப் பொருளை விளக்கமாக்குவது (பிரகாசிக்க வைப்பது) என்னும் பொருள்பட இத்தலைப்பு அமைந்தது. அடிகளார் முனிமொழி என்றதற்கு முனிவர் மாணிக்க வாசகரின் திருவாசகமும் திருக்கோவையாரும் என்று பொருள் எழுதினார்."வியாசசூத்திரம்'மாயாவாதம் கூறுவது.மாயாவாதியான சங்கரரால் பேருரை எழுதப்பெற்றது. சைவ சித்தாந்த நூல்களையே பட்டியலிட்டுப் பாடியுள்ள அவ்வையார் மாயாவாதக் கருத்துள்ள வியாச சூத்திரத்தைக் குறிப்பிடமாட்டார் என்று விளக்கியுள்ளார். இதற்குப் பல கோட்பாட்டுக் கருத்துக்களைத் தந்துள்ளார். மேற்பாட்டில் குறளும், மறைமொழியும், தமிழும் முனிமொழியும், திருவாசகமும், சொல்லும் என்பனவற்றில் ஈற்றில் உள்ளவற்றை எண்ணும்மைகளாகக் கொண்ட சபாபதி நாவலரவர்கள் ஆறும் ஒன்றுமாக ஏழு நூல்களாகக் கொண்டு உரை எழுதினார். - -

அடிகளார்.அவ்வாறு கொள்ளாமல்,உம்மை அமைந்தமுன்சொற்களைச் செய்யும் வாய்பாட்டுப் பெயரெச்சமாகக் கொண்டு, தேவர் (மொழியும் குறளும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/73&oldid=687141" இலிருந்து மீள்விக்கப்பட்டது