பக்கம்:தமிழ்மாலை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

திருநான்மறை மொழியும் மூவர் தமிழும், முனி (மாணிக்கவாசகர்) மொழியும் திருவாசகமும்,திருமூலர் சொல்லும் (திருமந்திரமும்) என்று பொருள் கண்டார். இதற்குப் பல சான்றுகள் காட்டிக்கோட்பாட்டுமுறையில் நிறுவியுள்ளார்.

வேதசிவாகமப் பிரமாண்யம், வேதாந்த மத விசாரம் என்னும் கோட்பாட்டு நூல்களிலும் சைவக் கோட்பாட்டை விளக்குகின்றார்.

"வேதநூல் சைவநூல் என்றிரண்டே நூல்கள்” என்றும் சிறி சகலாகமப் பண்டித அடிகளார் காட்டின அடித்தளத்தை ஏற்று இரண்டிலும் சைவநூல்தான் முதன்மையானது, சிறந்தது என்று பல்வகைச்சான்றுகளுடன் முறையே 150 பக்கங்களிலும், 14 பக்கங்களிலும் இரண்டு வெளியீடுகளைத் தந்தார். . . - சைவமே சித்தாந்தம்

சைவ சமயம் ஒன்றே சித்தாந்தம் வேறு சிவாகமங்கள் அதனைத் தொகுத்தும் விரித்தும் கூறுவனவே” என்று விளக்கம்தருகின்றார். சித்தாந்தம் என்றால் உண்மை ஞானம்’ என்று பொருள்காட்டி அதன் கோட்பாடே மூலமானது என்று நிறுவுவதே அடிகளாரின் கோட்பாடு. அடிகளார் நாகை வாழ்வில் தமிழ்,ஆங்கிலம், வடமொழி மூன்றிலும் புலமை பெற்றார். வேதத்தில் வடமொழிமறைகளில் இருக்கும்மறையின்பால் ஈடுபாடுகொண்டார். ஆயினும் சைவ சமயத்திற்கு அடுத்த நிலையிலேயே வடமறையை வைத்தார். அவர் விளக்கப்படி,

சிவபெருமான் தந்தை இத்தந்தையின் மூத்த மனைவி சிவாகமம் இளைய மனைவி வேதம் மூத்த மனைவியின் மக்கள் சைவர்; இளைய மனைவிக்கும் சைவரே மக்கள் இவ்வாறு தம் கோட்பாட்டைச் சைவக் கோட்பாட்டை முதன்மைப் படுத்தியே ஆய்ந்தார். வடமறையில் ஈடுபாடு கொண்டிருப்பினும் "வேதமே உயர்ந்தது”என்று கூறிச் தமிழ்ச் சைவத்தைக் குறைவாகப் பேசுவோர்முன்னே வடமறையிலுள்ள குறைகளை எடுத்து வைப்பதில் முனைப்பாகவே அடிகளார் செயல்பட்டார். இருப்பினும் உள்ளுணர்வில் வடமறையைப் போற்றினார். இக்கருத்தை அவர் பின்வருமாறு வெளிப்படுத்தியுள்ளார்;

"வேதத்தை யாம் வேண்டாமென்று பிரஸ்தாபிப்பதும், சிவாகம

துவேஷணஞ்செய்து வேதத்தைப் பூசிக்கு மெதிரிகளை மனநோகச் செய்யவேயன்றி வேதத்தில் வைத்த துவேஷணமன்றாகையாலும், எமக்கு வேறபாக்கியத்தன்மை உண்டாகாதென்க'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/74&oldid=687142" இலிருந்து மீள்விக்கப்பட்டது