பக்கம்:தமிழ்மாலை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"தமிழ்க்கென வாழ்ந்த தமிழ் மாமலை’

நாகையில் ஒரு மலை’

பொலிக! வாழ்க!

“மறைநூல் என்பது தமிழ்நான் மறைநூல்; மற்ற மறைநூல் பின்வந்த குறைநூல். முறையாய் இவைகட்குச் சான்று காட்டி,

முழக்கஞ் செய்த முத்தமிழ் அறிஞனை வாழ்த்தாத நாளில்லை. வையம் மறைமலையடிகள் மறவாத் திருப்பெயர் வாழ்த்தாத நாளில்லை' இந்த இசைப்பாடலின் சொல்லோட்டம் பாவேந்தர் பாரதிதாசனார் பாட்டு'என்று காட்டுகின்றது. பாவேந்தர் தாம் வாழ்ந்த நாளை எண்ணியும், நாம் வாழும் எதிர்காலநாள்களையும் எண்ணியுமே"வாழ்த்தாதநாள் இல்லை" என்று பாடினார். ஆனால், மறைமலையடிகளை வாழ்த்தும்நாள்கள் சிலவாயின. இன்றையநாளை மறைமலையடிகள் மறவாத் திருபெயர் வாழ்த்தும் நாளாகக் செய்த பெருமக்களைப் பொலிக வாழ்க’ என்று பாராட்டி வாழ்த்தி நன்றி கூறுகின்றேன்.

தமிழ்ப் பல்கலைக்கழக இராசராசன் விருது பெற்று அறக்கட்டளை நிறுவியுள்ள டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் நெஞ்சில் நிறைவாக நிறுத்தற்குரியவர். டாக்டர் கலைஞர் அவர்கள் சான்றோர்களை மதித்துப் போற்றும் பண்புக் கலைஞர். தம் பெற்றோரை முதற் சான்றோராகக் கொண்டு அன்னார் பெயரால் அறக்கட்டளையாக இராசராசன் விருதைப் படைத்தமையே அவர் தம் பண்பின் ஒளிவிளக்கு. அறக்கட்டளையில் ஐந்து சொற்பொழிவு என்றமைத்து ஐந்தையும் தமிழுக்கு ஐவகை முடிசூட்டிய தமிழ்ச் சான்ற்ோர் ஐவரைப் போற்றிப் புகழப் பதிந்தமை அவர் தமிழ் உள்ளத்தின் இளஞாயிற்றொளி, குறிப்பாக மறைமலையடிகளாரின் பல்வகைத்திறனைப் போற்றிப் பேசும், எழுதும் பெருந்தகை கலைஞர்.மக்களும் நிலைத்துப் போற்றச் செய்கையில் மர்மலாங்பாலத்தைமறைமலையடிகள் பாலம் ஆக்கியவர். நாட்டில் பெயர் முழக்கி நிலவ மறைமலைநகர் கண்டவர். புகைவண்டி நிலையத்திற்கு மறைமலையடிகள் பெயர் சூட்டிச் சிறப்பித்து, அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/8&oldid=687068" இலிருந்து மீள்விக்கப்பட்டது