பக்கம்:தமிழ்மாலை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளி வருகிறது. இச்சொற்பொழிவை நிகழ்த்தியவர் தஞ்சை நகரின் முதுபெரும் தமிழறிஞரும் தமிழுணர்வாகவே ಕ್ರೀTಂ। அமைத்துத கொண்டுவாழ்பவருமான கவிஞர்கோ. கோவை இளஞ்சேரன் அவர்கள் ஆவார். தமிழ்ப் பல்கலைக்கழக வளர்ச்சியில் தொடக்கம் முதலே பங்கெடுத்து உழைத்துச் சிறந்தவர். தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத் துறை இயக்குநராகப் பணியாற்றியவர். மறைமலை அடிகளின் பல்வேறு திறன்களை அவரின் நூல்களின் வழி நின்று, நல்ல ஆராய்ச்சிப் பாங்குடன், காலத்திற்கேற்ற முறையில் கவிஞர்கோ. 16೧೧ು. இளஞ்சேரன் அவர்கள் இந்நூலில் அறிமுகம் செய்துள்ளார். இன்றைய தலைமுறையினர் மறைமலை அடிகள் ஆற்றிய பணிகள் குறித்துத் தெரிந்துகொள்ள இந்நூல் நன்கு துணை புரியும்.

இருபதாம் நூற்றாண்டில் தமிழிலக்கிய - மொழி ஆராய்ச்சி வளர்ச்சிக்கு மறைமலை அடிகள் ஆற்றிய பணி குறிப்பிடத்தக்க சிறப்புடையது. இலக்கியம்-மொழி பற்றி மட்டுமன்றி, சைவசித்தாந்தம், மனித வாழ்வியல் போன்றவை பற்றியும் பல நூல்கள் எழுதியுள்ளார். 54 நூல்களைத் தமிழுலகத்திற்குத் தந்த பெருமைக்குரியவர் மறைமலை அடிகள். வடமொழி நூல்களைத் தமிழுக்கு அறிமுகம் செய்துள்ளார். மேலை நாட்டு அறிவியல் முறை பற்றி அறிந்து தமிழ்நாட்டார்க்கு ஏற்றவகையில் வாழ்வியல் நூல் எழுதியுள்ளார். தொல் இலக்கியங்களான முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை ஆகியன பற்றி அவர் எழுதியுள்ள ஆராய்ச்சிஉரைகள் மிகவும் புகழ் பெற்றவை நவீன கால மாறுதல்களை எல்லாம் உள்வாங்கிக் கொண்டு தமிழ் வளர்ச்சிக்கு ஆக்க பூர்வமாகச் செயல்பட்டவர் மறைமலை அடிகள் அவர்கள். “மாறுதலே உயிர் வாழ்க்கையாம், அஃது இன்மையே மாய்வாம்” என்ற அடிகளாரின் கூற்று, எதிர்காலத் தமிழ் வளர்ச்சி, நவீன கால வளர்ச்சியோடு இணைந்து செல்ல வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுவது எனலாம். தொலை நோக்குணர்வு மிக்க மறைமலை அடிகள் பற்றிக் கவிஞர்கோ. கோவை. இளஞ்சேரன் அவர்கள் எழுதியுள்ள இந்நூல் இன்றைய தமிழ் மக்களுக்கும், இளைய தமிழ் ஆராய்ச்சியாளர்க்கும், தமிழ் உணர்வு கொண்ட அனைவருக்கும் விருப்பமான ஒரு நூலாக அமையும் என்பதில் ஐயமில்லை. ---

கி. கருணாகரன் தஞ்சாவூர் - 5 துணைவேந்தர் 23,997 தமிழ்ப் பல்கலைக்கழகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/7&oldid=687067" இலிருந்து மீள்விக்கப்பட்டது