பக்கம்:தமிழ்மாலை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

"சாகுந்தல நாடக ஆராய்ச்சி எண்ணம் அடிகளார்க்கு எழுந்தது எப்படி? சென்னை நிகழ்ச்சி ஒன்றில் ஒரு பார்ப்பன படிப்பறிஞர் காளிதாசன் காப்பியம் பற்றி ஆங்கிலப் பேச்சைக் கேட்கச் சென்றவர்க்கு ஆழமான தாக்கமொன்று நேர்ந்தது. அவரே"அப்பேச்சு என்னுள் சுளிரென்று ஓர் ஆர்வ வேட்கையை அனன்றெழச் செய்தது" என்று எழுதியுள்ளார்.அத்தாக்கத்தால் சேக்சுபியரையும் காளிதாசரையும் ஒப்பீடு செய்து எழுத வேண்டும் என்று எண்ணங் கொண்டார். அதன் விளைவுதான் காளிதாசரின் சாகுந்தலத்தை அப்படியே மொழிபெயர்க்க வைத்து, அதற்கொரு ஆராய்ச்சியையும் செய்ய வைத்தது. அவர் குறிப்பிட்டதுபோன்று சேக்சுபியருக்குக் கருத்துத் திறவுகோல்களாக எழுந்த உல்ரிகிமுதல் பிராட்லி தொடர்ந்து பிராஸ்டெசுவரை அமைந்தமைபோன்று காளிதாசருக்கு அடிகளார் திறவுகோலரானார்.

அவ்வாய்வு ஒரு நெறியான ஆய்வு நாடக இயல்பைப் பொதுவாக ஆய்ந்து, 'நாடக வரலாறு கூறுகையில் தமிழில் உள்ள கூத்துக்கும் நாடகத்திற்கும் வேறுபாடு காட்டி

"நாடகமும் கூத்துமெல்லாம் முதன்முதலில் கண்டறிந்து நூல்கள் எழுதினோர் பண்டைத் தமிழாசிரியர்களேயாதல் நன்கு பெறப்படுகின்றது" என்று முடிவு காட்டி, நாடக அமைப்பிற்குத் தொல்காப்பியம் முதல் பல்வகைத் தமிழ்நூல்களின் இலக்கணம் காட்டி அவற்றிலெல்லாம் காளிதாசர் சாகுந்தலம் எவ்வாறு ஈடுகொடுத்துச் சிறந்து மிளிர்கிறது என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார். -

காளிதாசரின் நாடகக் கதையமைப்பை வியந்து அது தமிழர் அகப்பொருள் வழியது என்றுகாட்டி, அவர்நாடக மாந்தர்இயற்கையை எவ்வாறு பளிச்சென்று சுருக்கமாகக் காட்டியுள்ளார் என்பதை எடுத்துக் காட்டுகிறார். இடுக்கு கிடைக்கும்போதெல்லாம் கம்பரைச் சாடும் அடிகளார் இங்கும் கைகாட்டுகிறார். சகுந்தலையை வண்ணிக்கும் துசியந்தன் அவள் உடல் மெருகையும் திறத்தையும், “புதிது அவிழ்ந்த மல்லிகை மலர்போல்” என்ற சிறு தொடரில் வைத்திருப்பதை வியப்பவர் சீதையை இராமன்34 செய்யுட்கள் தந்தும் அவள் உடல்திறத்தை ஐயத்திலேயே வைத்துள்ளதை ஏளனம் செய்கிறார்.

தொடர்ந்து கதை நிகழும் காலமும் இடமும் விளக்கி காளிதாசர் வரலாறு காட்டப் புகுகிறார். காளிதாசர், தமிழ்நாட்டிலிருந்த வடபுலத்தில் குடியேறிய இடைக்குலத் தமிழர் என்கின்றார். அவர் சைவர், "இரண்டாம் சந்திரகுப்தனான விக்கி மாதித்தன் காலத்தவர் போச மன்னன் காலத்தார் அல்லர் என்று சான்றுகளுடன் அவர் காலம் கி.பி. 5 - ஆம் நூற்றாண்டில் முற்பகுதி என்று நிறுவுகிறார். அகச்சான்றுகள் பலவற்றில் அவர் யானைமுகக் கடவுளைக் குறிக்காததைக் காட்டுகிறார். காளிதாசரது நல்லிசைப் புலமையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/91&oldid=687159" இலிருந்து மீள்விக்கப்பட்டது