பக்கம்:தமிழ்மாலை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

வியந்தும்,நயந்தும் பாராட்டுகிறார். காளிதாசர் காலத்துப்பழக்கவழக்கங்களை அடுக்குகிறார்.

நிறைவாக அக்காப்பியத்தில் நேர்ந்துள்ள குறைபாடுகளையும் பட்டியலிடுகிறார்.மகளிரின் குணத்தன்மைகளில் அதிக கவனங்கொள்ளாமை ஒரு குறை. இயற்கைக்கு முரணாக மரங்கள் சகுந்தலையின் ஒப்பனைக்குப் பட்டாடையும், மணியணிகளும் வழங்கின என்பதும் குறை. வரலாற்றிற்குப் புறம்பாகத்துசியந்தன் தேவஉலகத்து இந்திரனுக்குப்போர்த்துணையானான் என்பதும் குறையே என்று குறித்துள்ளார்.

நாடக நூலைப் பற்றி இவ்வாய்வு அடிகளார் கருத்தறிவித்தது போன்று 'காளிதாசர் எவ்வகையிலும் ஒப்பாரும் மிக்காருமற்ற ஆங்கிலநாடக ஆசிரியர் சேக்சுபியருக்குக் குறைந்தவரல்லர் சமமானவர்” என்பதை தோலுரித்துக் காட்டியுள்ளது.

அடுத்துச் சிவஞானபோத ஆராய்ச்சி சைவச் சான்றோர் மெய் கண்டார் தமிழ்மரபுணர்ந்த பேராசான் என்பதையும், மெய்யுணர்வு தோய்ந்தவர் என்பதையும்,சைவம் அவர்க்குக் கடமைப்பட்டது என்பதையும் சான்றுகளுடன் காட்டுகிறது. மூலமான 12நூற்பாக்களே மெய்கண்டார்யாத்தது;பிறவெல்லாம் மற்றையோர் சேர்ப்பு என்றும் அப் பன்னிரண்டும் சைவம், மூலச் சமயம் என்பதன் அணையாவிளக்குகள் என்றும் நாட்டியுள்ளார். இவ்வாய்வு சைவத்திற்கு ஒரு நிலவொளி சித்தாந்தத்திற்கு ஒரு கதிரொளி.

நிறைவாக அவர் செய்த திருக்குறள் ஆராய்ச்சி இடம்பெறுகிறது. முன்னர் அளவையியல் பங்கில் முதற்குறள் வாத நிராகரணம் என்றது ஒர் ஆய்வுப் புகுமுகம் ஆகும். இங்கு திருக்குறள் தமிழ் மரபின் கருவூலம் என்று நாட்டுகின்றார். திருவள்ளுவர் யாத்த திருக்குறள் உலகில் வேறெங்கும் காண முடியாத, எதிர்காலத்திலும் காண இயலாத உலகப் பெருநூல் என்று நிறுவியுள்ளார். பரிமேலழகர் உரை பலவற்றைத் தமிழ் மரபைவிட்டு அகன்றது என்று காட்டியுள்ளார். தென்புலத்தார் யார்? என்று வினாவெழுப்பி அதற்கு பரிமேலழகர் கூறியுள்ள, “தென்புலத்தார் பிதிரர். பிதிரராவார் படைப்புக் காலந்தொட்டு அயனாற் படைக்கப்பட்டதோர் கடவுட் சாதி அவர்க்கிடம் தென்றிசையாதலின் தென்புலத்தார் என்றார்" என்னும் கருத்தை மறுத்து ஆய்ந்துள்ளார்.இதற்கு

"தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போல் புதல்வரைப் பெறர் தீரும்"

என்னும் புறப்பாட்டையும் அதற்குப் பழைய உரையாகிய தென்றிசைக்கண் வாழ்வோராகியதுங்குடியிற் பிறந்தோர் என்பதையும் காட்டி தமிழினத்தாரின் மூதாதையர் என்று முடிவு எழுதினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/92&oldid=687160" இலிருந்து மீள்விக்கப்பட்டது