பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

"நீரின் றமையா உலகம் போலத்

   தம்மின் றமையா கங்கயங் தருளி..."    (நற்றிணை-1) 

2. "நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்

     வீடில்லை கட்டாள் பவர்க்கு. ’’ (குறள்-791) 
     ‘‘. . . . . . . . . . . . . . . . . . . .....பெரியோர்
     நாடி நட்பி னல்லது 
     நட்டு நாடார்தம் ஒட்டியோர் திறத்தே."
                                 (நற்றிணை-32) 

3. "பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர். ’’ (குறள்-580)

முன்னும், சங்கப் புலவர்க்குப் பின்னும் வாழ்ந்தவராகக் கொள்ளலாமே என்று சிலர் கருதலாம்.

புலவர் பலர் ஒர் அறநூலிலிருந்து கருத்துகளை எடுத்துத் தம் பாக்களில் பயன்படுத்தலே பெருவழக்குடையது. அங் வனம் பயன்படுத்துவோர் அறநூல் மேற்கோளை அப்படியே கையாளலும், அதனைப் பல அடிகளால் விரித்துக் கூறலுமே இயல்பு. தொகை நூல்களில் இந்த முறையினைக் காண லாம். திருக்குறள் இரண்டடிகளால் இயன்றது. சங்ககாலப் புலவர்களோ, இரண்டடிக் (குறட்) கருத்துகளைப் பல அடி களில் விளக்கிக் கூறியுள்ளனர். இந்த உண்மையை நன்கு உளங்கொள்ளின், திருக்குறள் கருத்துகளையே பின் வந்த சங்ககாலப் புலவர் கையாண்டனர் என்பதைத் தெளியலாம்.

 மேலும், "அறம் பாடிற்றே" என்று தெளிவாகச் சங்க காலப் புலவர் தம் பாடலுள் சுட்டியிருத்தல் கவனிக்கத் தக்கது. வடமொழியிலுள்ள தர்ம சூத்திரங்கள் உரைநடை யில் இயன்றவையே தவிரப் பாட்டால் இயன்றவையல்ல. பாட்டாலியன்ற பழைமையையும் பெருமையையும் உடைய அறநூல் திருக்குறள் ஒன்றே யாதலின், அதனையே புலவர் சுட்டினாரெனக் கொள்ளுதல் ஏற்புடையது. எனவே, சங்க காலத்திலேயே திருக்குறள் சங்கப் புலவர் பாராட்டுக்கு உரியதாக இருந்தது எனக் கோடலே ஏற்புடைத்து.