பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

ஊர்கள்: இந்நூலில் கீழ்வரும் ஊர்கள் இடம் பெற்றுள்ளன: தேனூர் (54), சோழர் ஆமூர் (56) , இருப்பை (58) , மத்தி கழாஅர் (61) , தொண்டி (171) , கொற்கை (185), ஊர்களின் பொதுப் பெயர்களாகப் பேரூர்(77) , நல்லூர் (2.98) , மூதூர் (372) , சீறுார் (382), பாக்கம் (முல்லை நிலத்து ஊர்-439), வயலூர் (459) என்பவை: இடம் பெற்றுள்ளன.

பேரூர் என்பது ஊரினும் பெரியது; 'சீறுார்’ என்பது ஊரினும் சிறியது. 'மூதூர்’ என்பது காலப்பழமை வாய்ந்த ஊர் எனப் பொருள்படும். சங்கப் பாக்களிலேயே ஓர் ஊர் 'மூதூர்' எனப்பட்டது எனின், அவ்வூரின் பழமையை: எண்ணிப் பார்த்தல் வேண்டுமல்லவா?

சிறப்புச் செய்திகள்

பாசறை என்பது அரசரும் அமைச்சரும் போர் புரியத் தங்கியிருக்கும் இடம். படைத்தலைவரும், வீரரும், இயவரும் உள்ள இடம் பாடி என்பது. போர் நிகழ்ச்சியின் பெருமை, காலம் முதலிய நிலைமை நோக்கித் தக்கவாறு பெருக்கி அமைக்கும் பாடி இருக்கை கட்டூர் என்பது (445). இங்ஙனம் இவை வேறு வேறு காணப்படினும், பொதுவகையில் " 'பாசறை' என்ற இடத்து இவை யாவும் அடங்கிவிடும். இவை காலப்போக்கில் ஊர்களாக மாறுதலும் உண்டு. திரு எதிர்கொள்பாடி, பெருங்கட்டூர் என்னும் ஊர்களின் பெயர்கள் பாடியையும் கட்டூரையும் நினைவூட்டுதலைக் காணலாம் ?2

குறிஞ்சி நிலத்தில் முருகன் வணக்கம் நடைபெற்றது. குறவன் தன் உறவினருடன் மழைவேண்டும் எனக் கடவுளை வேண்டுவான் (251). மகப்பேறு இல்லாத குறவன் கடவுளை வேண்டி மகனையோ மகளையோ பெறுவான்:

2 க்ஷ, பக்.971