பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

199


புரிந்தவன் (73,291), எழினி (80), ஆய் (84), அஞ்சிதகடூர் அதியமானஞ்சி (91), வல்வில் ஓரி-கொல்லி மலைத் தலைவன் (100), தொன்று முதிர் வேளிர் (164), பாரி (196), மலையன் திருக்கோவலூரையும் முள்ளுரையும் ஆண்டவன் (312), ஓரி (199) , கள்ளி (210),அழிசி (257), தொண்டையர் (260), ஆதி அருமன் (293), அகுதை (298), விச்சிக்கோ (328).

 ஊர்கள் : காஞ்சியூர் (10), மரந்தை (34, 116) , சிறு நல்லூர் (பொதுப் பெயர் 55, 345) , உறந்தை (116), தொண்டி (128, 210, 238), குன்றுர் (164), முள்ளூர் (312) , குறும்பூர் (328) .

ஊரில் தெருக்கள் பல இருந்தன. அந்தணர் தெரு 'ஆசில் தெரு’ எனப்பட்டது (272). ஊரில் பலர் கூடிக் கடவுளை வணங்கவும் ஊர்ச் செய்திளைப் பேசவும் மன்றம் இருந்தது (241) . ஊரார் உண்ணுதற்கும் நீராடுவதற்கும் ஊருக்கு அண்மையில் பொய்கைகள் இருந்தன (113, 370). ஊருக்கு அண்மையில் பொய்கையும் அதற்கு அப்பால் சிறிது -தொலைவில் காட்டாறும் இருந்தன என்று ஒரு செய்யுள் கூறுகின்றது (113). சில ஊர்களில் கேணிகள் இருந்தன (369).

  சிறப்புச் செய்திகள் : குறிஞ்சி நிலத்தில் குறவன் மரங்களை வெட்டி நிலத்தை உழுது தினை விதைப்பான் (214); தினை அறுவடையானதும் மீண்டும் தினை விதைப்பான்; அப்பொழுது அவரையையும் உடன் விதைப்பான் (82). அவன் யானையாலும் எட்டமுடியாதபடி குன்றின்மீது கட்டப்பட்ட பரணிலும் வேங்கை மரத்தின்மீது கட்டப்பட்ட பரணிலும் இருந்து தினைப்புனத்தைக் காப்பான்; யானை முதலிய விலங்குகள் வந்து பயிரை மேயாதபடி இரவில் கொள்ளியைக் காட்டுவான். தீயைக் கண்ட விலங்குகள் விலகி ஓடும். இங்ஙனம் மிகவுயர்ந்த பரணில் இருந்தமையால் அவன் 'சேணோன்’ எனப்பட்டான் (150, 357).